மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
பெங்களூரு: ''உடை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. நிர்வாகமும் சுத்தமாக இருக்க வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., ரவி தெரிவித்தார்.இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள உடை, சுத்தமாக உள்ளது. ஆனால் அவரது ஆட்சி, அசுத்தமாக உள்ளது. உடை மட்டும், துாய்மையாக இருந்தால் போதுமா. நிர்வாகமும் துாய்மையாக இருக்க வேண்டும்.மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், பெரும் முறைகேடு நடந்துள்ளது. மக்களின் நிலத்தை கையகப்படுத்தினால், வீட்டு மனைகளை அளிக்க வேண்டும். இதில் மோசடி நடந்துள்ளது. மோசடியில் ஈடுபட்டோர், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவராக இருக்க கூடும். முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. சித்தராமையா பரிசுத்தமானவர் என்பதை நிரூபிக்க, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆவணங்களுடன் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேட்டில், எனது பங்களிப்பு இல்லை. நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என, சித்தராமையா கேள்வி எழுப்புகிறார். இவரது சொந்த மாவட்டத்திலேயே, முறைகேடு நடந்துள்ளது. இதற்கு இவரது பொறுப்பு இல்லையா. இவரது ஆதரவாளர்களுக்கு, ஊழலில் தொடர்பு உள்ளது. யாரை காப்பாற்ற முதல்வர் முயற்சிக்கிறார்.முறைகேடுகளை மூடி மறைக்கும் கலை, முதல்வருக்கு நன்றாக தெரியும். இதற்கு முன் அர்க்காவதி வழக்கிலும், பெருமளவில் ஊழல் செய்து மூடி மறைத்தார். அரசின் முறைகேடுகளை சுட்டிக் காண்பித்து, நாங்கள் மக்களிடம் செல்வோம்.முறைகேடு நடந்திருப்பதாக, ஏழு மாதங்களுக்கு முன்பே, மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதி உள்ளார். சட்ட பட்டதாரியான சித்தராமையா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜ., அரசில் முறைகேடு நடந்திருந்தாலும், அது தவறுதான். நாங்கள் யாரையும் காப்பாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago