உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு முடி வெட்ட தயாரா? பா.ஜ., தலைவருக்கு அமைச்சர் கேள்வி

எனக்கு முடி வெட்ட தயாரா? பா.ஜ., தலைவருக்கு அமைச்சர் கேள்வி

சித்ரதுர்கா: ''எனது தலை முடியை வெட்ட நேரமில்லை. பணி எதுவும் இல்லாமல் இருந்தால், எனது தலை முடியை வெட்டட்டும்,'' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு அழைப்பு விடுத்தார்.'பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு, மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை. அமைச்சர் முடி வெட்டி கொண்டு சினிமாவில் தொடரட்டும்' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து, சித்ரதுர்காவில் நேற்று மது பங்காரப்பா அளித்த பேட்டி:என் தலை முடியை வெட்ட நேரமில்லை. ஒருவேளை விஜயேந்திரா, பணி எதுவும் இல்லாமல் இருந்தால், எனது தலை முடியை வெட்டட்டும். தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அவர், பொறுப்புடன் பேச வேண்டும்.எடியூரப்பா இன்னும் முதல்வராக இருக்கிறார் என்ற மாயையில், அவர் உள்ளார். இத்தனை காலமும் கல்வி துறையின் புனிதத்தை பா.ஜ., கெடுத்து விட்டது. இதை காக்கவே காங்கிரஸ் பாடுபடுகிறது. கல்வி துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.அவற்றில் சில கடினமாக தோன்றினாலும், குழந்தைகளின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்து உள்ளோம். காங்கிரஸ் அரசு வந்த பின், கடந்தாண்டு 43,000 கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணி நியமனம் பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது. கல்வி துறையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.மேலவை தேர்தலை காங்கிரஸ் இதுவரை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மேலவையில் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை தேவை. மேலவையில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கட்சி தொண்டர்கள், தலைவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும். தென்கிழக்கு ஆசிரியர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ், ஆசிரியர்களின் குரலாக செயல்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ