உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்

மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு, “கடலில் கலக்கும் கூடுதல் நீரை சேமித்து வைப்பதற்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். அணை கட்டுவது எங்கள் உரிமை. கட்டியே தீருவோம். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்,” என, கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் மழையால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன.இரண்டு அணைகளில் இருந்தும், வினாடிக்கு 68,845 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், கபினி அணை நீர் முழுதும் தமிழகத்துக்குச் செல்கிறது. அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை சமர்ப்பிப்பது வழக்கம். மன்னர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.அந்த வகையில், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி ஆகிய இரண்டு அணைகளுக்கும், கர்நாடக அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், முறங்களில் மங்கள பொருட்களுடன் நேற்று சீர்வரிசை சமர்ப்பணம் செய்தனர்.நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாதாரண மழை ஆண்டில், அணைகள் நிரம்பும்பட்சத்தில், ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி., நீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்.ஆனால், 2022 - 23ல், 665 டி.எம்.சி., நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்தாண்டு, இதுவரை 83 டி.எம்.சி., நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் அதிகமாக திறந்துவிடப்படும். ஆனால், கஷ்ட காலத்தில்குறிப்பிட்ட நீர் திறந்துவிட முடியாது.கடலில் கலக்கும் கூடுதல் நீரை சேமித்து வைப்பதற்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். அணை கட்டுவது எங்கள் உரிமை. கட்டியே தீருவோம். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார். இதனால், கர்நாடகாவை விட தமிழகத்துக்கு தான் அதிக பயன் உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. மாண்டியா எம்.பி., குமாரசாமி அனுமதி பெற்றுத் தந்தால், 65 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gopalakrishnan Thiagarajan
ஜூலை 30, 2024 13:33

ஒரு நல்ல முடிவு.மேகதாது அணை முழுவதையும் தமிழக அரசு தனது சொந்த செலவில் கட்டி தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். பெங்களூருகு தேவை படும் குடி நீரை எடுத்து ஒரு விலைக்கு நாம் கொடுக்கலாம். நாம் தெலுகு கங்கைக்கு செய்வது போல.


venugopal s
ஜூலை 30, 2024 12:22

காவிரியில் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகே மிச்சமுள்ள உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு கொடுப்போம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு தான் பிரச்சினைக்கு முக்கிய காணமே.உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி நீரை பகிர்ந்து கொண்டால் மட்டுமே தமிழகம் மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.அது நடக்கப் போவது இல்லை!


PR Makudeswaran
ஜூலை 30, 2024 10:13

இந்திரா மற்றும் மு க வினால் தான் இந்த மூன்று அனைகளையும் கட்டினீர்கள். அவர்கள் உங்களுக்கு ஜால்ரா போட்டு தமிழ் நாட்டை நாசம் செய்தார்கள். காவிரிக்கு மோசம் panninaarkal.


Palanisamy T
ஜூலை 30, 2024 08:32

கடல்நீரில் வீணாக கலக்குகின்ற நீரா? கடலுக்குப் போய் செருகின்ற நீரை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. அது இயற்க்கை. அப்படி தடுத்தால் கடல் வாழ் உயிரினங்கள் நாளடைவில் அழிந்துப் போகும் அதுவும் முற்றாக அழிந்துப் போகும் நிலை உருவாகும். இப்போதே பருவநிலை மாற்றத்தால் கடல்நீரின் உப்புத் தன்மை அதிகரித்து வெப்பமும் உயர்ந்து உலகின் பலநாடுகளில் கடல்வாழ் உரியினங்கள் கரையில் வந்து ஒதுங்குவதும் அழிவதும் வாடிக்கை யாகிவிட்டது. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. இதில் முற்றாக பாதிக்கப் படப் போவது தமிழகம். இதற்க்கு முன் கர்நாடகாவில் கட்டிய அணையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டது போதாதா?


Swaminathan L
ஜூலை 30, 2024 07:54

கடலில் சென்று கலக்கும் நீரை சேமிக்கும் திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தினாலொழிய தமிழகத்துக்கு விமோசனம் இல்லை.


R.RAMACHANDRAN
ஜூலை 30, 2024 06:47

மேக தாது அணை கட்டியே தீருவோம் என்பவர்கள் முதலில் மாதா மாதம் காவிரியில் திறந்து விட வேண்டும். அணைகள் நிரம்பி உபரி நீர் தான் விடுவோம் என்பவர்கள் மேக தாது அணை கட்டினால் அந்த அணையும் நிரம்பி வழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்ற நிலை உருவாகும்.அதன் பிறகு இன்னும் பல அணைகள் கட்டுவர் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என கடலில் ஆற்று நீர் ஓரளவிற்காவது கலக்க விட்டால் தான் அது மேகமாக மாறி மழை பொழியும்.அனைத்து அவர்களையும் மடக்கி விட்டால் கடலில் நீர் மட்டம் குறையும்.


Palanisamy T
ஜூலை 30, 2024 08:59

அணையக் கட்டியே தீரும்வோம் எப்படி? தமிழக அரசு அனுமதிக் கொடுக்கும்வரை அவர்களால் ஒருச் செங்களைக் கூட கட்டமுடியாது. நாம் எதுவாக சொன்னாலும் தெளிவாக அறிந்துச் சொல்லவேண்டும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ