உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் கொலை உறவினர்கள் கைது

பெண் கொலை உறவினர்கள் கைது

பெங்களூரு: பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் வசித்தவர் சோமினி சத்யபாமா, 44. வசந்த நகரில் உள்ள, நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்தார். கடந்த 11ம் தேதி இரவு வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல, ஹோட்டல் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த இரண்டு பேர் சோமினி சத்யபாமாவை ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டு தப்பினர். ஹைகிரவுண்ட் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் சோமினி சத்யபாமாவை கொலை செய்ததாக, அவரது அண்ணன் மகன் சாகர், 25, துாரத்து உறவினர் ஆகாஷ், 26 நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி