உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பானிபூரியில் அபாயமான அம்சங்கள்; தடை விதிக்க சுகாதார துறை திட்டம்?

பானிபூரியில் அபாயமான அம்சங்கள்; தடை விதிக்க சுகாதார துறை திட்டம்?

பெங்களூரு : பானிபூரியில் நோய்களை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதால், அதற்கு தடை விதிக்க சுகாதாரத் துறை ஆலோசிக்கிறது.கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறங்கள், உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பது, ஆய்வில் தெரியவந்தது. எனவே இந்த தின்பண்டங்களில், செயற்கை நிறம் பயன்படுத்த கர்நாடக சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.பலரும் விரும்பி சாப்பிடும் பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் நீரில், அபாயகரமான நிறம் பயன்படுத்தப்படலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பானிபூரி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா என்பதை கண்டறிய, உணவுத்துறை, பானிபூரி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான ரசாயனம் பயன்படுத்துவது தெரிந்தது.பரிசோதனைக்கு உட்பட்ட 243 மாதிரிகளில், 43 மாதிரிகள் சாப்பிட தகுதியானது அல்ல. மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இன்னும் அறிக்கை வரவில்லை. அறிக்கை வந்த பின் பானிபூரிக்கு தடை விதிப்பது குறித்து, சுகாதாரத்துறை ஆலோசிக்கிறது.இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட பானிபூரி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மால்கள், பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களின் வெளியே, நடைபாதை வியாபாரிகள் விற்கும் பானிபூரி, திருமணம் உட்பட பல இடங்களில் இருந்தும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.தின்பண்டங்களில் செயற்கை நிறங்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

s vinayak
ஜூன் 28, 2024 16:42

கள்ளக்குறிச்சி தயாரிப்போ?


Kuppan
ஜூன் 28, 2024 12:51

கட்டுப்பாடு தேவைதான் ஆனால் இதை விட ஆயிரம் லட்சம் மடங்கு அதிக கேடு தரும் சாராயம் அரசு விற்கலாம் பணம் வருகிறது என்பதற்காக எந்த கேடு பொருளையும் அரசு விற்கலாம். இது என்ன நியாயம்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 28, 2024 13:41

பானி பூரி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் சாப்பிடும் உணவு... உணவுக்கும் சாராயத்துக்கும் வித்தியாசம் தெரியாத பிறழா நீ....?


Anantharaman Srinivasan
ஜூன் 28, 2024 11:35

வரும் காப்போம் என்பதை தவிர்த்து உண்ட பின் மருந்துண்டு போராடுவோம்.


Ramesh N
ஜூன் 28, 2024 09:54

TASMAC is good for health. So is illicit liquid. Panchu Mithai and Pani Puri are life threatening, and should be banned.


தமிழ் நாட்டு அறிவாளி
ஜூன் 28, 2024 09:10

இந்த ஹிந்தி கார பசங்கள ஊரா விட்டு தொரத்தணும் ன இதன் சரியான வழி


Prasanna Krishnan R
ஜூன் 28, 2024 09:50

தமிழ்நாடு உன் அப்பாக்கு சொந்தமா?


தமிழ்வேள்
ஜூன் 28, 2024 12:54

அவர்கள் - இட்லி தோசை விற்பவர்களை துரத்து -என்று கூறினால், வடஇந்திய மாநிலங்களில் உள்ள ஏகப்பட்ட தமிழ் உணவு வியாபாரிகள் இங்கு அகதிகள் போல வருவார்கள் ... வைத்து உன்னால் மேய்க்க இயலுமா? டாஸ்மாக் அடிமை என்பதை நிரூபிக்கும் திராவிட கோமாளி ..


Sampath Kumar
ஜூன் 28, 2024 08:40

சரி மொத்தத்தில் தின்கிற அம்புட்டும் கேடு உள்ளது தான் நாம மக்கள் தின்னு தின்னு பழகி போட்டானுக அதுனால உடம்பில் எதிர்ப்பு சக்தி பெருகி விட்டது அதுனால் தடி வேண்டாம் யுவர் ஹானோர் என்று வழக்கு போடுவானுக ஒருகும்பல் பாருங்க


MADHAVA NANDAN
ஜூன் 28, 2024 08:26

முறையாக ஆய்வு நடத்தினால் தெரியும் எதனை தின்பண்டங்கள் சாப்பிட தகுதியற்றவை என்று அனால் இவர்கள் பலநேரங்களில் இவர்களும் வேலைசெய்கிறார்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிலையில் உள்ளதால் அவ்வப்போது இப்படி ஒரு செய்தியை வெளியீட வேண்டியுள்ளது அவ்வளவுதான் மற்றநேரங்களில் இவர்கள் வேலை செய்வதை யார் உறுதி செய்வது,இதுவெல்லாம் ஒரு ஆவணம்தான் ஏனென்றல் அரசு அலுவகங்களில் ஆவணம்தான் பேசும். வருடத்தில் ஒருநாளில் 100 தலைக்கவசம் வழக்கு பதிவதுபோல்தான் இதுவும், மக்களுக்கு இதுவெல்லாம் மறந்துபோகும். பாவம் அவர்களுக்கு வயிற்றுப்பாட்டிற்காக ஓடவேண்டிய கட்டாயம் அதுவே இவர்களின் ஆதாயம் ...


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ