உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரோஹித் வெமுலா தலித் இல்லை; வழக்கு முடித்து வைப்பு

ரோஹித் வெமுலா தலித் இல்லை; வழக்கு முடித்து வைப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலையில் பிஹெச்.டி., படிப்பு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016ல் தற்கொலை செய்து கொண்டார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., உடனான மோதலும், ஜாதி வேறுபாடும் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீசார், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ரோஹித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவரின் தந்தை ஓ.பி.சி., இனத்தைச் சேர்ந்தவர்.பட்டியல் இனத்தைச் சேர்ந்த ரோஹித்தின் தாய் ராதிகா, உண்மையை மறைத்து போலி சான்றிதழ் பெற்றுள்ளார்.உண்மையான ஜாதி அடையாளம் வெளியே தெரிந்து பிரச்னைகளை ஏற்படுத்தும் என்ற பயத்தில் ரோஹித் தற்கொலை செய்துள்ளார். இதற்கு யாரும் காரணம் அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ரோஹித் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

எஸ் எஸ்
மே 04, 2024 21:09

இந்த விஷயத்தில் தமிழ் தொலை காட்சி ஊடகங்கள் எப்படியெல்லாம் விவாதம் செய்தன?


ஆரூர் ரங்
மே 04, 2024 10:58

இனிமே தலித் சர்டிபிகேட் பெற ஓசிச்சோறு சூரமணியை மட்டுமே அங்கீகரித்து விடியல் அரசு சட்டமியற்றும்.


Duruvesan
மே 04, 2024 10:31

ஆக ஆந்திரா போலீஸ் பிஜேபி யின் கைக்கூலி என ராவுள் கூவல்


GoK
மே 04, 2024 09:56

அவர் தலித் என்று ராகுல் காந்தி சோனியா காந்தி பிரியங்கா காந்தி முன்மொழிய சுடாலியும் திருமாவும் வழிமொழிந்து ரேவந் ரெட்டி சான்றிதழ் தர தயார் இவர்களை அணுகாமல் அந்த பையனின் அம்மா அதிகாரிகளிடம் சென்றதுதான் தப்பு


UTHAMAN
மே 04, 2024 09:38

இன்று பட்டியல் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்கள் பெற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மாற்று மதத்தினரே அந்த மோசடிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றுத்தர காங்கிரஸ் முயல்கிறது


Godfather_Senior
மே 04, 2024 09:27

பார்த்தீங்களா, உண்மை வேறு விதமாக இருக்க, பழியை எப்படி அரசியல் கலப்பில் மாற்றி போட்டு ஆதாயம் தேடுறாங்க


M S RAGHUNATHAN
மே 04, 2024 08:31

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தவறாக பேசி பிரச்சினை செய்த உறுப்பினர்கள் மீது ஏன் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது மிகப் பெரிய கலவரம் இந்த அரசியல் வாதிகளால் தூண்டப்பட்டு நடைபெற்றது


பிரகாஷ்
மே 04, 2024 08:06

தற்கொலை.பண்ணிக்கிறவங்க உண்மையான காரணத்தை எழுதிவெச்சுட்டு போங்க. அப்பதான் போலீஸ் இருக்க உதவும்.


Mohan
மே 04, 2024 07:52

அவர்களுக்கு வேறு நாட்டு பற்று இருப்பதால், தமது சொந்த நாட்டை மதிப்பதில்லை நாட்டை போற்றுபவர்களை எதிர்க்கின்றனர் தாய் நாட்டையம் அதன் பெருமை பேசும் மாணவர் அமைப்புகளை எப்படியாகிலும் எப்பொழுதும் இடது அமைப்புகள் பிரயோகிப்பது "" பட்டியலினருக்கு அவமதிப்பு"" என்ற ஆயுதம் தான் அதை வைத்து எந்த அமைப்பை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கும் முயற்சியை இடது மற்றும் அவர்களது கூட்டளிகளான காங்கிரசும் தங்கள் சுயநலத்துக்காக முன்னிருத்திக் கொள்ளும் செயல் என்பதை பொதுமக்கள், குறிப்பாக பட்டியலின மக்கள் புரிந்து இவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்


குமார், மதுரை
மே 04, 2024 07:50

இந்தப் பிரச்சினையை முன்னின்று நடத்திய நக்சல்களுக்கு என்ன தண்டனை


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி