உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்

மஹாராஷ்டிராவில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளும் மஹாயுதி கூட்டணி, 21 - 60 வயது வரையிலான திருமணமான, விவாகரத்து பெற்ற, ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 'என் பெண் சகோதரிக்கு' என்ற அந்த திட்டம் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. பாலேவாடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துவக்கி வைத்தார்.அப்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, “மக்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால், இந்த தொகை 2,000 அல்லது 3,000 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்,'' என்றார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஓட்டு வங்கியை குறிவைத்தே இந்த திட்டத்தை மஹாயுதி கூட்டணி அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N.Purushothaman
ஆக 18, 2024 11:39

ஆதரவற்ற பெண்கள் சரி.. அது என்ன விவாகரத்து பெற்ற பெண்கள் ? இப்போல்லாம் மணமுறிவிற்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது ...எது எப்படியாயினும் ரொக்கம் போன்றவை கொடுப்பது தேவையற்ற வேலை ...அணைத்து கட்சிகளும் இப்படி செய்ய ஆரம்பித்தாள் நாடு நாசமடையும் ..பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் ...


கல்யாணராமன்
ஆக 18, 2024 08:45

இப்படி சகட்டுமேனிக்கு கஜானா பணத்தை எடுத்து ஓட்டுக்காக வாரி இறைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு எல்லா மாநிலங்களுக்கும் பரவுகிறது. மது விற்பனையை நம்பி இப்படி அறிவித்து செயல்படுத்துகிறார்கள். இதை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் இந்தியா, இலங்கை லெவலுக்கு போய்விடும். மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். வருமானம் குறைத்தால் இப்படி வீண் செலவை மாநில அரசுகள் தவிர்க்கும்.


VENKATASUBRAMANIAN
ஆக 18, 2024 07:42

எல்லாமே ஓட்டு அரசியல் ஆகிவிட்டது. நீதிமன்றங்களுக்கு இதை கட்டுப்படுத்த தெரியவில்லை.


sridhar
ஆக 18, 2024 07:37

நாட்டை மொத்தமாக குட்டிச்சுவராக்கும் திட்டம். நாடெங்கும் பரவுகிறது . மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்.


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:18

அது எப்படி தமிழகத்தில் மட்டும் தகுதியுள்ளோருக்கு மட்டும் அதும் ரூ1000 மட்டும். 500 கூடுதலாக கொடுக்க வேண்டும். வீட்டுக்கு இரண்டு குடிமகன் உருவாக்கினால்தான் இது போன்ற இலவசங்கள் சாத்தியம் என்ற நிலை விரைவில் வரும். தமிழன் என்ற ஒரு இனம் இருந்தது திராவிடர்கள் வந்து அழித்துவிட்டு சென்று விட்டார்கள் என்று சரித்திரத்தில் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய நிலை கூட வரலாம்.


மோகனசுந்தரம்
ஆக 18, 2024 05:44

ஆஹா அற்புதம் அற்புதம். நம்முடைய திருட்டு திராவிட மாடல் அகில இந்தியாவிலும் பரிணமித்து உள்ளது. திருட்டு அயோக்கிய திராவிட மாடலை கொண்டாடுவோம். இதை கண்டுபிடித்தவர்கள் வாழ்க பல்லாண்டு.


அரசு
ஆக 18, 2024 05:42

இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் வரை, தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என மேலிடத்தின் உத்தரவு போலும்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி