உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.31,000 கோடி பில் பாக்கி; அரசு ஒப்பந்ததாரர்கள் அவதி

ரூ.31,000 கோடி பில் பாக்கி; அரசு ஒப்பந்ததாரர்கள் அவதி

பெங்களூரு : நீர்ப்பாசனம், பொதுப்பணித் துறை உட்பட அரசின் பல்வேறு துறைகள், ஒப்பந்ததாரர்களுக்கு, 31,000 கோடி ரூபாய் பில் பாக்கி வைத்துள்ளன.பெங்களூரு மாநகராட்சி சார்பில், ரோடு சீரமைப்பு, ஏரிகள், கால்வாய் சீரமைப்பு, தெரு விளக்குகள் நிர்வகிப்பு, நடை மேம்பாலம் கட்டியது என, பல்வேறு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், பில் தொகைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர்.அதே போன்று, மாநில அரசின் பல துறைகள் ஒப்பந்ததாரர்களுக்கு 31,000 கோடி ரூபாய் பில் பாக்கி வைத்துள்ளன. நீர்ப்பாசனத் துறை மிக அதிகமாக 12,069 கோடி ரூபாய், பொதுப்பணித் துறை 8,754 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.கிருஷ்ண பாக்யா நீர் கார்ப்பரேஷன் லிமிடெட், கர்நாடக நீர்ப்பாசன கார்ப்பரேஷன் லிமிடெட், காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் லிமிடெட், விஸ்வேஸ்வரய்யா நீர்ப்பாசன கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்ட வெவ்வேறு பணிகளுக்கு பெருமளவில் பில் பாக்கி உள்ளது. ஆட்சிக்கு வரும் கட்சிகள், பில் பாக்கியை வழங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.பழைய பாக்கியுடன், அந்தந்த அரசுகள் காலத்தில் நடத்தப்பட்ட பணிகளின் பில்களும் சேர்ந்துள்ளதால், நிலுவை தொகை அதிகரித்துள்ளது. நகர வளர்ச்சி துறை 3,800 கோடி, சிறிய நீர்ப்பாசனத் துறை 1,800 கோடி, பொதுப்பணித் துறை 9,200 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. பெங்களூரு மாநகராட்சி 3,000 கோடி ரூபாய் பில் பாக்கி உள்ளது. இதை எப்படி வசூலிப்பது என, தெரியாமல் ஒப்பந்ததாரர்கள் கையை பிசைகின்றனர்.விரைவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, பில் பாக்கியை வழங்கும்படி வேண்டுகோள் விடுக்க, ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை