மேலும் செய்திகள்
எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சல்யூட்; சொல்கிறார் ராகுல்
3 hour(s) ago | 23
கோல்கட்டாவில் வன்முறை; மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
4 hour(s) ago | 1
பெங்களூரு: நடப்பாண்டில் இருந்து அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை, மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழைய பாக்கியான, 11 கோடி ரூபாயை செலுத்தும்படி, பள்ளிகளுக்கு மின் வினியோக நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கின்றன.கர்நாடகாவில், 46,000 அரசு பள்ளிகள், 1,200க்கும் மேற்பட்ட பி.யு., கல்லுாரிகளுக்கு, 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஏப்ரல் முதல் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. குடிநீரையும் இலவசமாக வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, இலவச மின்சாரம், குடிநீர் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில், முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.இதற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கினார். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், அரசு பள்ளிகள், பி.யு., கல்லுாரிகள் பயன்படுத்திய மின்சாரத்துக்கு, 11.15 கோடி ரூபாய் பில் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. இதை மின் வினியோக நிறுவனங்களுக்கு, கல்வித்துறை செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண பாக்கி உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மின் இணைப்பை துண்டிப்பதாக, மின் வினியோக நிறுவனங்கள் மிரட்டுகின்றன. மின்சாரம் இல்லாவிட்டால், குடிநீர் வினியோகம், கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது, மதிய உணவு தயாரிப்பது என, பல பணிகள் பாதிக்கும் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.சில பள்ளிகளின் ஆசிரியர்கள், தொண்டு அமைப்புகள், நன்கொடையாளர்களிடம் நிதியுதவி பெற்று, மின் கட்டணம் செலுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் பில் கட்டணம் மிகவும் அதிகம் என்பதால், உதவி கிடைக்கவில்லை.சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளின் மின் கட்டண பாக்கி குறித்து, உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பதிலில், மின் கட்டணம் செலுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இதுவரை செலுத்தவில்லை. எனவே மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட மாட்டாது.
3 hour(s) ago | 23
4 hour(s) ago | 1