குழாய் வடிவிலான வெடிபொருட்கள் பறிமுதல்
மைசூரு : மைசூரு அருகே பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்த, குழாய் வடிவிலான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.மைசூரு டி.நரசிப்பூர் கெம்பயனஹுந்தி கேட் பகுதியில் ஒரு ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலின் அருகே உள்ள காலி நிலத்தில், நேற்று காலை நீலம், கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் கவர்கள் கேட்பாரற்று கிடந்தன.நீண்ட நேரமாக கவர்கள் அங்கேயே கிடந்ததால், சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், டி.நரசிப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பிளாஸ்டிக் கவர்களை திறந்து பார்த்தனர்.குழாய் வடிவில் ஒன்பது வெடி பொருட்கள் இருந்தன. பாறைகளை தகர்க்கவும், விலங்குகளை வேட்டையாடவும் பயன்படுத்தப்படுவது என்பது தெரிந்தது. விலங்குகளை வேட்டையாட எடுத்துச் சென்றபோது இங்கு வைத்து சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது. வெடி பொருட்களை செயலிழக்க வைத்து எடுத்துச் சென்றனர்.