| ADDED : ஜூலை 03, 2024 05:22 AM
கோலார் : போலீஸ் நிலையத்தில், இரண்டு மகளிர் ஏட்டுகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் சீமந்தம் நடத்தினர்.கோலார் நகர மகளிர் போலீஸ் நிலையத்தில், நேஹா மற்றும் பாரதி ஆகியோர் ஏட்டாக பணியாற்றுகின்றனர். இருவரும் கருவுற்று இருக்கின்றனர். நேஹா, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாரதி ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு போலீஸ் நிலையத்தில், சீமந்தம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதன்படி போலீஸ் நிலையத்தில், இரண்டு ஏட்டுகளுக்கும் நேற்று விமரிசையாக சீமந்தம் நடந்தது.இதில் இருவரின் கணவர், குடும்பத்தினர் பங்கேற்றனர். கோலார் டெபுடி எஸ்.பி., நாக்தே, சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் சங்கராச்சாரி, சதானந்தா பங்கேற்றனர்.போலீஸ் நிலைய வளாகத்தில், பெரிய அளவில் ஷாமியானா போட்டு, விருந்தினர்களுக்கு ஆடம்பரமான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகளின் செயலை, பலரும் பாராட்டினர்.