உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சக்தி திட்டம் ஓராண்டு நிறைவு; 227 கோடி முறை இலவச பஸ் பயணம்

சக்தி திட்டம் ஓராண்டு நிறைவு; 227 கோடி முறை இலவச பஸ் பயணம்

பெங்களூரு: கர்நாடகாவில், சக்தி திட்டம் அமல்படுத்தி, ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், 227 கோடி முறை பெண்கள், அரசு பஸ்களில் இலவச பயணம் செய்துள்ளனர்.கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆட்சியை பிடித்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, காங்., ஆட்சிக்கு வந்தால், 'சக்தி, கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி, யுவநிதி, அன்னபாக்யா' ஆகிய ஐந்து வாக்குறுதி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தது.அதன்படி, கடந்தாண்டு ஜூன் 11ம் தேதி, அரசு போக்குவரத்து கழக பஸ்களில், கர்நாடக பெண்கள், மாநிலம் முழுதும் இலவசமாக பயணம் செய்யும், 'சக்தி' திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே, ஏராளமான பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.இதனால், ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு பெண் பயணியரின் எண்ணிக்கை அதிகமானது. சக்தி திட்டம் அமல்படுத்தி, நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவில் சக்தி திட்டம் அமல்படுத்திய ஓராண்டில், 226 கோடி முறை பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதன் மொத்த டிக்கெட் மதிப்பு, 5,500 கோடி ரூபாய் ஆகும்.அதிகபட்சமாக, பி.எம்.டி.சி., பஸ்களில், 71.45 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். மேலும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், 69.5 கோடி முறை; என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., பஸ்களில், 52.12 கோடி முறை; கே.கே.ஆர்.டி.சி., பஸ்களில், 33.47 கோடி முறையும் பயணம் செய்துள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை