உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 120 மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆப்பரேஷனில், முன்னணி சமூக வலைதளங்களை தவிர்த்து மிகவும் கவனமான முறையில் குற்றவாளிகள் செயல்பட்டது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து சி.பி.ஐ., அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:நாடு முழுதும் 120 மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில், வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல் வெளியே வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை குற்றவாளிகள் மேற்கொண்டுஉள்ளனர். தேர்வு நடக்கும் மையத்திற்குள் காலை 8:02 மணிக்கு நுழைந்த நபர்கள், அங்கிருந்த வினாத்தாள் அடங்கிய பார்சலை பிரித்து படம் பிடித்துள்ளனர். பின், அதை இருந்தபடியே மூடிவைத்துவிட்டு 9:23 மணிக்கு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வினாத்தாளின் புகைப்படத்தை பிரபலமான சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்வதை தவிர்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை வேறு வழியில் தொடர்பு கொண்டு வினாத்தாளை அவர்கள் அளித்தது. விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது நான்கு மையங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் தெளிவாக இல்லாததால், பிற மையங்களில் அதை மாணவர்களால் பயன்படுத்த முடியவில்லை. குற்றவாளிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கான முன்தேதியிட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பல மாணவர்கள் முன்பணமாக ஒரு தொகையை கொடுத்தது மட்டுமின்றி முன்தேதியிட்ட காசோலைகளை இந்த இடைத்தரகர்களுக்கு வழங்கிஉள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Swaminathan L
ஜூலை 25, 2024 13:36

சட்டதிட்டங்களில் உள்ள ஓட்டைகள், அமுல்படுத்துவதில் இருக்கும் மெத்தனம், அமுல்படுத்துவோர்களில் கறுப்பாடுகள், செல்வங்கொழிக்கும் குடும்பங்களில் பிறந்து வளரும் அறிவுச் சூனியங்கள், அவைகளை எப்படியாவது மருத்துவராக்க முற்படும் பெற்றோர்கள், இந்த மூன்றையும் கண்டுபிடித்து ஒன்றிணைத்து தில்லுமுல்லு, மோசடிகள் செய்ய வழி வகுக்கும் ப்ரோக்கர்கள்.. என்று சகல அனர்த்தங்களுக்கும் நம் தேசம் காலங்காலமாகக் களமாக இருந்துள்ளது. தனி மனித ஒழுக்கம், நேர்மை குட்டிச்சுவரானால் தில்லுமுல்லு, மோசடிகள் பெருகத்தானே செய்யும்?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 13:00

2008 இல் புதுச்சேரியில் (UPA கூட்டணி ஆட்சி நடந்த போது). பொறியியல் மருத்துவத் தேர்வு மார்க் ஷீட்கனில் முறைகேடாக கூடுதல் மார்க் போட்டு. நூற்றுக்கணக்கான பேருக்கு பாஸ் போட்டார்கள். அதில் ஒரு உருப்படாத மாணவனுக்கு பாஸ் போட்டு விட்டார்கள். இதனைக் கண்டுபிடித்த பல்கலைக்கழக பணியாளர் மர்மமான முறையில் கொல்லப்பபட்டார். பின்னணியில் முக்கியஸ்தர் இருந்ததாக செய்தி. ஆக முன்னோடி யாரு?


kalyan
ஜூலை 25, 2024 12:39

Online பரீட்சை ஒன்றுதான் இத்தகைய வினாத்தாள் கசிவதை தவிர்க்க முடியும்


venugopal s
ஜூலை 25, 2024 12:06

பாஜக அமைச்சர்கள் எல்லோரும் நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூவினார்களே, இதற்குப் பெயர் என்னவாம்?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 11:02

காப்பியடித்து BA வாங்கின ஆளுக்கு சாதாரண கூட்டல் கணக்கே தெரியல.87 ம் 9 ம் 107 என்றார். மாநிலத்தை ஆள முக்கிய தகுதி? கேரள சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் பதவிக்கு ஏராள பணம் கைமாறியுள்ளது . மக்களுக்கு சேவை செய்யவா இவ்வளவு செலவு? தேர்வு முறைகேடு எங்குதான் நடக்கவில்லை?


skv srinivasankrishnaveni
ஜூலை 25, 2024 11:38

அட நீங்க வேற பிரபலத்தின் மகனோ மகளோ ன்னா படிப்பே ஏராட்டியும் கோழிமுட்டை வாங்கினாலும் பாசாகுவானுக ளே பல கல்லூரிகளிலே அதுமட்டுமா காசும் வாங்கிண்டு பாஸ் பண்ணப்பட்ட அறிவுக்களஞ்சியங்களும் உண்டு பார்த்தே படிக்கத்தெரியாத கேஸ்களும் உண்டுங்கோ


arul raj
ஜூலை 25, 2024 10:16

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலும் நாள் மாறாட்டம் செய்து எம் பி பி எஸ் பாஸ் செய்து இருப்பார். இதற்கு முன்பும் முறைகேடுகள் நடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. மொத்தத்தில் எல்லா தேர்வுகளுக்கும் கண்காணிப்பு அதிகம் தேவைப்படுகிறது


Sampath Kumar
ஜூலை 25, 2024 09:53

நீட் தேவை இல்லை பரப்பினார்கள் நடத்தும் நீட் சென்டர்கள் பணம் சம்பாதிக்க ஒரு வழிதான் இந்த நீட் இந்த தேரு அவர்களின் வாழ்க்கையை வளமாக்கி கொடு உள்ளது ஆர்யா கும்பல் சம்பாதிக்க என்று சொன்னால் உடனே திராவிட மாடல் சம்பாதிக்க ஏதிர்க்கிறார்கள் என்றுஒரு கும்பல் கிளம்பும் இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த இரண்டு கும்பலும் ஒன்டரி ஒன்றை எதிர்த்து வளர்ந்து கொடுத்தான் உள்ளது ஓன்று தேய வில்லை அது எப்படி ? மொத்தத்தில் மாணவர்கள் மக்குகள்


vadivelu
ஜூலை 25, 2024 10:58

இந்த பாபியை மன்னித்து விடுங்கள். கொஞ்சம் புத்தி ஸ்வாதீனம் இல்லாதவராக தெரிகிறார்.


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 11:04

தேர்வுகள் சரியில்லாமல் இருப்பதால்தானே வாலாட்டும் பிராணி கூட இங்க BA பட்டம் வாங்குது ( நன்றி. RSB)


J.Isaac
ஜூலை 25, 2024 13:50

இனத்திற்கு தானே இனத்தின் குணம் தெரியும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 25, 2024 09:18

நான்கு மையங்களில் மட்டுமே வெளியே தெரிந்துள்ளது. தெரியாத முறைகேடுகள் ஏராளம். மோடியின் ஆட்சி முறைகேடுகள் உறைவிடமாகிவிட்டது, திருட்டு திராவிட கழகங்கள் போல.


VENKATASUBRAMANIAN
ஜூலை 25, 2024 08:23

அப்போ டின்பிஸ்இ வேண்டாம் என்று சொல்லி விடலாமா. 10 12 தேர்வுகளும் வேண்டாம் என்று சொல்லி விடலாம். மூளையை அடகு வைத்து விட்டு பேசுபவர்களிடம் பேசி பயன் இல்லை.


Duruvesan
ஜூலை 25, 2024 07:34

இதுக்கு தான் விடியல் ஈஸியா சொல்றாரு, நீட் வேணாம். டைரக்ட் ஆ நம்ம ஆளுங்க காலேஜ் ல ஒன்னோ ரெண்டோ கோடி குடுத்து சேர்த்துக்குங்கன்னு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை