உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணல் கடத்தலை தடுக்க சென்ற எஸ்.ஐ., டிராக்டர் ஏற்றி கொலை

மணல் கடத்தலை தடுக்க சென்ற எஸ்.ஐ., டிராக்டர் ஏற்றி கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷாதோல்: மத்திய பிரதேசத்தில், சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த சென்ற உதவி சப் - இன்ஸ்பெக்டர் மீது, கடத்தல் கும்பல், டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சோன் நதிக்கரையில், டிப்பர் லாரிகள் வாயிலாக சட்ட விரோதமாக மணல் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.இந்நிலையில், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள படோலி என்ற கிராமத்தில், சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, பிரசாத் கனோஜி, சஞ்சய் துபே ஆகிய கான்ஸ்டபிள்களுடன், உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி, நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்குச் சென்றார். அப்போது, மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த அவர் முயன்றார். ஆனால் அதி வேகமாக வந்த டிராக்டர், உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மற்ற இரு காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், டிராக்டர் டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரின் மகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், உரிமையாளர் சுரேந்திர சிங்கை தேடி வருகின்றனர். அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 30,000 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என, போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, இது விபத்தா அல்லது கொலையா என விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.jayaram
மே 07, 2024 19:45

தமிழ் நாட்டுக்கு வந்து ப்யிற்சி எடுத்திருப்பார்கள் போல


subramanian
மே 06, 2024 16:26

மணல் கடத்தல், கொலை தொடர் கதை ஆகிறது கலெக்டர் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் நாடு முழுவதும் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் ட்ரொன், ஹெலிகாப்டர், சாட் லைட் மூலம் கண்காணிக்க வேண்டும் ரவுடி , கிரிமினல் , ஆயுதம் தாங்கிய கும்பல் எவரையும் சுட்டுக் தள்ளி நாட்டை காப்பாற்ற வேண்டும்


Natchimuthu Chithiraisamy
மே 08, 2024 11:30

சினிமா அனுபவம் பழைய கதைகள் பழைய திரை படங்கள் அதிகம் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கிறது கலெக்டர் தன் வீட்டிலிருந்து கலெக்டர் ஆபீஸ் வரை உள்ள குப்பை மேட்டை அகற்ற முடியுமா ?


Raa
மே 13, 2024 11:17

முதலில் கவனிக்க வேண்டியது கனிம வளத்துறை எதற்கு துறை வைத்துள்ளார்களோ, அது அதை அழிக்கப் பிறந்தது போலவே செயல்படுகிறது வனத்துறையிடம்தான் மரம் வெட்ட பெர்மிஷன் மது விலக்குத்துறைதான் டாஸ்மாக்குக்கு பிசினஸ் பண்ணிக் குடுக்கும் கோயில் துறை, கேட்கவே வேண்டாம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ