உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு வெள்ளி ஆரத்தி தட்டு

மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு வெள்ளி ஆரத்தி தட்டு

சாம்ராஜ் நகர்: பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலை கோவிலுக்கு, பக்தர் ஒருவர் சிறப்பான வெள்ளி ஆரத்தி தட்டை, காணிக்கையாக வழங்கியுள்ளார்.சாம்ராஜ்நகர், ஹனுாரில் அமைந்துள்ள மலை மஹாதேஸ்வரா மலைக்கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தினமும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இயற்கை காட்சிகளை ரசிக்க, சுற்றுலா பயணியரும் வருகின்றனர். கோவிலுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.தற்போது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வெள்ளி ஆரத்தி தட்டு, காணிக்கையாக வந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த நாகமணி குடும்பத்தினர், 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி ஆரத்தி தட்டை, காணிக்கையாக வழங்கினார். இதில் மஹாதேஸ்வராவின் வாகனமான புலி, உடுக்கையுடன் கூடிய திரிசூலம், நந்தி உருவம் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ