உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரிசல் கவிழ்ந்து ஆறு பேர் பலி

பரிசல் கவிழ்ந்து ஆறு பேர் பலி

விஜயபுரா : சூதாடியபோது பிடிக்க வந்த போலீசிடமிருந்து தப்பித்துச் சென்றபோது, ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.விஜயபுரா மாவட்டம், கோல்ஹரா பலுதி ஜகவேல் கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் அமர்ந்து, நேற்று மாலை எட்டு பேர் பணம் வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கோல்ஹரா போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்றனர்.போலீசாரை பார்த்ததும், ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பரிசலில் ஏறி எட்டு பேரும் தப்பி சென்றனர்.நடு ஆற்றில் பரிசல் சென்றபோது, காற்றின் வேகத்தில் பரிசல் கவிழ்ந்தது. எட்டு பேரும் ஆற்றில் விழுந்தனர். தண்ணீர் அதிகமாக சென்றதால் தத்தளித்தனர். இருவர் மட்டும் நீச்சல் அடித்து கரைக்குத் திரும்பினர். மற்ற ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.அவர்களது உடல்களைத் தேடும் பணி நடந்தது. இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற நான்கு பேரில் உடல்களை தேடும் பணி தொடர்ந்துநடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ