உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகள்

17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, நாட்டில் உள்ள 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததை அடுத்து, அதில் மிகப்பெரிய அளவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.முற்றிலுமாக மாற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ல் நடைமுறைக்கு வருகின்றன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்பணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக, 40 லட்சம் பணியாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித்துறை பணியாளர்களுக்கும் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நாடு முழுதும் உள்ள 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் ஜூலை 1ல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த நிகழ்வுகளில், புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பு, அதில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 29, 2024 07:16

மத மற்றும் ஜாதி துவேஷங்கள் பேசுவது இபிகோவின் படி தண்டனைக்குரிய குற்றம். சனாதனம் பற்றி பேசியதற்கு இப்பொழுதுதான் வழக்கே போட்டிருக்கிறார்கள். தீர்ப்பு வர இன்னும் ஒரு பத்து வருடமாவது ஆகும். அதன் பின் பக்க, கீழ், மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்டால் தண்டனை. ஆக தண்டனைச்சட்டம் என்பது சோளக்காட்டு பொம்மை போல. ஒரு சில காகங்கள்தான் பயப்படும்.


Svs Yaadum oore
ஜூன் 29, 2024 07:02

இதெல்லாம் தமிழ் நாட்டுக்கு செல்லாது ....இங்கே சமூக நீதி மத சார்பின்மை ஆட்சி நடக்குது ..


Mani . V
ஜூன் 29, 2024 05:50

முழு பார்ட்டியுடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ