உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர் உறுதி

தமிழர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: 'அரசு துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்' என இலங்கை அதிபர் அனுரா திசநாயகே உறுதி அளித்துள்ளார்.இலங்கையில் பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அதிபர் அனுரா திசநாயகே கூறியதாவது: அதிபர் தேர்தலில் யாழப்பாணத்தில் எனக்கு 27 ஆயிரம் பேர் மட்டுமே ஓட்டளித்தனர். காரணம், நாங்கள் அப்போது இந்த பகுதிகளில் எங்கள் வாக்குறுதிகள் பற்றி அதிகம் பிரசாரம் செய்யவில்லை. ஆனாலும், இப்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்து நிறையப்பேர் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளதற்கு நன்றி.நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்துவோம். உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இலங்கை அரசு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் அனைத்தும் அவரவருக்கே திரும்ப ஒப்படைக்கப்படும்.இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்குப் பகுதியில் உள்ள கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர். கடல் வளங்களைச் சுரண்டுவது நடக்காமல் இருப்பதையும், இலங்கை மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதையும் அரசு உறுதி செய்யும்.

முழு சுதந்திரம்

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அரசு தமிழர்களின் முழு சுதந்திரத்தை உறுதி செய்யும். இது குறித்து பாதுகாப்பு துறையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும். சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதில் அரசு கவனம் செலுத்தும். இந்த பகுதியில் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.இலங்கையின் வட பகுதியில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் காரணம். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

128 மீனவர்கள், 199 படகுகள்

இலங்கைக் கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, நேற்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை பின்னணியாகக் கொண்டு இலங்கை அதிபர் அனுரா திசநாயகே பேச்சு அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்டோபர் 23ம் தேதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின், 128 மீனவர்களும், 199 படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Senthoora
நவ 11, 2024 16:51

ஹ்ஹா... நீங்களே தமிழன் என்று பெயர்வைத்து, தமிழனுக்கே குழிபறிக்கிறீங்களே, அந்த எட்டப்பன் பரம்பரை இன்னுமா தமிழ்நாட்டில் இருக்குறீங்க.


Sampath Kumar
நவ 11, 2024 14:18

தமிழ் வேல் நீ எல்லாம் ஒரு உன்னை தமிழன் கிடையாது வந்தேறி வந்தேறிகளின் கருத்தை தான் நீ பிரதி பலிக்கின்றாய் யாழ் தமிழர்களின் உண்மை நிலைமை தெரியாத நீ எல்லாம் பதிவிடுவது வெற்றி வேலை விடுதலை போராட்டத்தின் அடிப்படை கூட அறியாத கருணாதி, அண்ணா, போன்றவர்கள் ஏதிர்த்தவர்கள் தான் யாழ் தமிழர்கள் உண்மை தமிழனுக்கு இது அங்கு புரியும் இந்திய அரசு முப்பது இரண்டு நாடுகள் இணைத்து வீரம் செறிந்த எம் மக்கள கொன்று குவித்த கொலைகளின் அடிவருடி உன்னக்கு எல்லாம் தமிழ்வல்லன் என்ற பயறை துப்பு போலி கவிக்கும்பல் வந்தேறி


தமிழ்வேள்
நவ 11, 2024 16:00

தமிழில் நான்கு வார்த்தைகள் பிழையின்றி எழுத இயலாத உங்களுக்கு தமிழ் பற்றும் , தமிழின பற்றும் ........வாயால் சிரிக்க இயலாது ஓவாய் ஓவாய் உபி என்பதை ஐயமற நிரூபிக்கிறீர்கள் ..பலே ..பேஷ் .


Ms Mahadevan Mahadevan
நவ 11, 2024 13:58

தேர்தல் பரப்புரை இப்படித்தான் இருக்கும். ஏமாற வேண்டாம்


Rajah
நவ 11, 2024 13:55

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழர்கள் வாழவில்லை . மலையகம் மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் திமுகவை ஆதரிப்பதில்லை. ஆனால் எம்ஜிஆர் மீது மட்டும் மிகுந்த மரியாதை உள்ளவர்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இங்குள்ள தமிழர்கள் அனுரா திஸ்சநாயக்காவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளார்கள். காரணம் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் பிரிந்து கிடக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களின் மீன் வளத்தை இந்தியத் தமிழர்கள் ஆக்கிரமிப்பதை ஆதரிப்பது சரியானதா? தமிழர்களுக்கு தமிழர்களே விரோதிகளா? போதை பொருள் கடத்தல் இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


sankar
நவ 11, 2024 13:53

இலங்கையின் வட பகுதியில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் காரணம்- வச்சான் பாரு ஆப்பு


Ramesh Sargam
நவ 11, 2024 12:07

முதலில் ஒப்படைத்துவிட்டு பிறகு அறிக்கை விடவேண்டும்.


தமிழ்வேள்
நவ 11, 2024 11:31

யாழ்ப்பாண தமிழனுக்கு காணி கொடுப்பது தேவையற்றது ...தனிநாடு கேட்பார்கள் ...அடிமைகளாகவே இருக்கட்டும் ...திமுக கருணாநிதி அண்ணாதுரை ராமசாமி வகையறாக்களை ஆதரித்த திருட்டு கூட்டம் ...சுதந்திரம் என்ன கேடு அதுகளுக்கு ?


magan
நவ 11, 2024 14:03

முற்கனுக்கு வைதெறிச்சல் வரத்தானே செய்யும் ஏன் என்றால் இலங்கையர்கள் மூர்க்ககண்களை அந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்


Rajah
நவ 11, 2024 14:11

தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு வழங்கி இந்திய மண்ணில் உதவிகளும் போர்ப் பயிற்சியும் கொடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? எம்ஜிஆர் உதவி செய்கின்றார் என்பதற்காக இன்னுமொரு பிரிவினருக்கு உதவி செய்து ஒரு சகோதர யுத்தத்தை தூண்டியவர் கருனாநிதி அவர்கள். இலங்கையில் தனி நாடு கோரிக்கையையை ஆதரிப்பது போல் நடித்து அதற்கெதிரான அத்தனை அரசியல் காய் நகர்தலையும் செய்தவர் கருணாநிதி அவர்கள். இது பலருக்கு புரியாது.


mindum vasantham
நவ 11, 2024 11:23

sinhalese people have racist tendencies towards Tamils, similarly Telugu clans have


சமீபத்திய செய்தி