உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை

பயங்கரவாதிகளை "தட்டி தூக்க" அதி நவீன ட்ரோன்: காஷ்மீரில் தேடுதல் வேட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அக்னூரில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஜூலை 15) அக்னூரில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:53

இதனால் என்ன ஆகும். அவர்களை இது காட்டிக்கொடுக்கும். அது நீதிமன்றத்திற்கு செல்லும். அது தீர்வு வர 20 வருடம் ஆகும். அப்படி வந்தாலும் அதில் தண்டனை இருக்காது வெறும் வள வள கொழ கொழ என்று இருக்கும். ஆகவே இதில் இப்படி செய்யவும். அதில் துப்பாக்கி தோட்டா வைக்கவும். பயங்கரவாதிகளை கண்டவுடன் உடனே சுடவேண்டும் என்று சாப்ட்வேர் வைத்து விடவும். அப்போது ஹான் இது மிகுந்த உபயோகமான திட்டம்.


மேலும் செய்திகள்