உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்டேஷன் மாஸ்டர் கொர்... : அரைமணி நேரம் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்

ஸ்டேஷன் மாஸ்டர் கொர்... : அரைமணி நேரம் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்

ஆக்ரா : உ.பி.யில் எட்டவா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கியதால் சிக்னல் கிடைக்காமல் அரைமணிநேரம் எக்ஸ்பிரஸ் ரயில் காத்திருந்தது.உ.பி.,மாநிலம் ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்டது எட்டாவா ரயில்வே ஸ்டேஷன் இங்கு உள்ள ரயில்வே ஸ்டேஷன் சிறியதாக இருந்தாலும் முக்கியமானது . காரணம் என்னவென்றால் ஆக்ரா மற்றும் ஜான்சியிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் ரயில்கள் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த ஸ்டேஷனை கடந்து செல்கின்றன. இதனால் ரயில்களுக்கான சிக்னல்களை மாற்றுவது முக்கியமானதாக இருந்து வருகிறது.சம்பவத்தன்று (மே.,3-ம் தேதி) ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்டேஷன் வழியாக சென்ற பாட்னா-கோட்டா எக்ஸ்பிரஸ் ரயில் கிரீன் சிக்னல்-க்காக அரை மணி நேரமாக நின்றிருந்தது. மேலும் ரயிலின் லோகோ பைலட், தூங்கி கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரை எழுப்புவதற்காக பலமுறை ஹாரன் அடித்து எழுப்பி உள்ளார்.இச்சம்பவம் குறித்து ஆக்ரா டிவிஷனல் அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.நோட்டீஸை பெற்றுக்கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர் தவறை ஒப்புக்கொண்டார் மேலும் தன்னுடன் அன்றைய தினத்தில் பணியில் இருந்த பாயின்ட்ஸ்மேன் தட ஆய்வுக்கு சென்றதால் தனியாக இருந்ததால் தூங்க நேரிட்டது என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக்ரா ரயில்வே டிவிஷன் பி.ஆர்.ஓ., பிரஷாஸ்தி ஸ்ரீ வஸ்தவா கூறுகையில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். டிவிஷனல் ரயி்ல்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வாலின் நடவடிக்கை, ஊழியர்கள் நேரம் தவறாமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது 90 சதவீதம் வரையில் நேரம் தவறாமையை அடைய முடிகிறது. இருப்பினும் ஸ்டேஷன் மாஸ்டரின் கடமை மீறல் ரயில் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
மே 06, 2024 10:34

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஷிப்ட்டுகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தினால் தூங்காமல் என்ன செய்வார் ? எட்டுமணிநேர வேலை போதுமானது ஊழியர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியதுதான்


Pachaimuthu
மே 06, 2024 08:38

எல்லாம் சரிதான் அய்யா தலைமையிடம் நன்றாகவே தூங்குகிறது அதனால தப்பே இல்ல தவறுகளை மூடி மறைத்து நிர்வாகம் நடத்தப்படுகிறது விசாரணை என்பதெல்லாம் கண் துடைப்பு மதுரை ரயில்வே கோட்டத்தில் எவ்வளவு பின்னடைவுகள் உள்ளது இதை எல்லாம் சரி செய்ய அதிகாரி உள்ளாரா அல்லது மேலே உள்ள தலைமை நிர்வாகமா?


Pachaimuthu
மே 06, 2024 08:31

All is well but there are many obstructions in MDU Division,who will correct this weather Railway Board or Division Head


பல்லவி
மே 06, 2024 00:03

தூங்க வேண்டியவர் முழித்திருக்கா , விழித்திருக்கவேண்டியவர் தூங்கறார்


venugopal s
மே 05, 2024 23:28

எல்லாம் ராமராஜ்யத்தின் மகிமை! ஜெய் ஸ்ரீ ராம்!


சிவம்
மே 05, 2024 22:29

ஐயா, இங்கு எல்லோரும் இருந்தும், தினமும் வைகை எக்ஸ்பிரஷ் தாமதமாக வருகிறது, தினம்.....தினம்.... தாமதம், இதை பற்றி இது வரை ஒரு செய்தி கூட வெளி வரவில்லை


ديفيد رافائيل
மே 05, 2024 23:55

நானும் Vaigai express ல் travel பண்ணியிருக்கேன் train time க்கு arrival ஆகியிருக்கு


subramanian
மே 05, 2024 21:23

ஐயா நீங்கள் வீட்டில் நன்றாக தூங்கி விட்டு வேலைக்கு வாருங்கள் பல உயிர்கள், பலரின் தனிப்பட்ட திட்டங்கள் உங்கள் கையில் உள்ளது ரயில் சரியான நேரத்தில் வந்தால்தான் எல்லாம் சரியாக நடக்கும் இந்தியன் ரெயில்வே ஊழியர் அனைவருக்கும் நன்றிகள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ