உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்

மம்தா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி, கோல்கட்டாவில் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததால், கோல்கட்டா நகரமே ஸ்தம்பித்தது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயற்சி டாக்டர், ஆக., 9ம் தேதி, மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e8mv8hzw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், முக்கிய குற்றவாளியான, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராயை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 'பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்' என, கடந்த சில நாட்களாக, கோல்கட்டாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மாபெரும் பேரணி

இதற்கிடையே, 'முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி, 'நபன்னா' என்றழைக்கப்படும் தலைமை செயலகத்தை நோக்கி, மாபெரும் பேரணி நடத்தப்படும்' என, மாணவர்கள் அறிவித்தனர். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், முன்னெச்சரிக்கையாக நேற்று தலைமை செயலகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர். தலைமை செயலகத்துக்கு வரும் வழிகளில் தடுப்புகளை அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.மேலும், தலைமை செயலகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், பாதுகாப்பு பணியில், 6,000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.இந்நிலையில், திட்டமிட்டபடி மாணவர்கள் நேற்று போராட்டத்தை நடத்தினர். கோல்கட்டாவின் கல்லுாரி சதுக்கம் என்ற இடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

கல்வீசி தாக்குதல்

அப்போது, 'பெண் டாக்டர் மரணத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்' என, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து, தலைமை செயலகத்தை நோக்கி மாணவர்கள் செல்ல முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை போலீசார் கலைத்தனர். கோல்கட்டாவில் உள்ள ஹவுரா பாலம், எம்.ஜி.ரோடு, ஹேஸ்டிங்ஸ் சாலை, பிரின்ஸ்ப் காட் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில், போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். பக்கத்து மாவட்டமான ஹவுராவிலும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஹவுராவின் சந்த்ராகாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களிலும், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மம்தாவுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதை அவர் சமாளிப்பாரா அல்லது அடிபணிவாரா என்பது புரியாத புதிராக உள்ளது.இதற்கிடையே, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, மேற்கு வங்கம் முழுதும், இன்று, 12 மணி நேர 'பந்த்'துக்கு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ''மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக பந்த் நடக்கவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக, பா.ஜ., பந்த் நடத்துகிறது,'' என்றார்.

மம்தா சர்வாதிகாரி!

முதல்வர் மம்தா பானர்ஜி சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய, அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா மற்றும் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலிடம், உண்மை கண்டறியும் சோதனையை, சி.பி.ஐ., நடத்த வேண்டும்.-கவுரவ் பாட்டியா தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

மம்தா தான் பொறுப்பு!

அமைதியாக போராடிய மாணவர்கள் மீது, போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. போராட்டத்தில் பங்கேற்க, ஹவுரா ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த சுபோஜித் கோஷ், பூலோகேஷ் பண்டிட், கவுதம் சேனாபதி, ப்ரீதம் சர்க்கார் ஆகிய நான்கு மாணவர்களை, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காணவில்லை. அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது தெரியவில்லை. போலீசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என, நாங்கள் பயப்படுகிறோம். மாணவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், மம்தா தான் பொறுப்பு.சுவேந்து அதிகாரி எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,

நான்கு மாணவர்கள் கைது!

காணாமல் போன நான்கு மாணவர்களை பற்றி, ஒரு அரசியல் கட்சி தலைவர் தவறான தகவலை தெரிவித்து வருகிறார். இன்றைய போராட்டத்தில், பெரிய அளவில் வன்முறையை அரங்கேற்ற நான்கு மாணவர்கள் திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, பொது பாதுகாப்பு கருதி, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவல், அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.பிரவீன் குமார் திரிபாதிஹவுரா போலீஸ் கமிஷனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

MADHAVAN
ஆக 29, 2024 11:40

தர்மராஜ் தங்காரத்னம் உன் வீட்ல இப்படித்தான் நடக்குமா


பாரதி
ஆக 28, 2024 20:37

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், இது ஜனநாயக நாடு... என்கிறோம். ஆனால், ஓட்டு போடுபவர்கள் ...ஆக இருக்கும் வரை... தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருடர்களாக தானே இருப்பார்கள்...


Narayanan
ஆக 28, 2024 11:45

வங்கதேசத்தில் தோன்றிய மாணவர் போராட்டம் மேற்கு வங்கத்திலும் தொடர்வது வேடிக்கை . மாணவர்கள் படிக்கும் வேலையை விடுத்து இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுவது தேவை அற்றது . பொது அமைதிக்கு தீங்கு .முதலில் படித்து வெளியே வாருங்கள் . உங்கள் வாழ்க்கை சிறக்க அதை செய்யுங்கள் . வீண் போராட்டம் செய்து உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் . மற்றவர்களுக்கு தொந்திரவாக இருக்காதீர்கள் .


Gurumurthy Kalyanaraman
ஆக 28, 2024 20:23

இந்த மாதிரி ஒரு போராட்டம் நடக்கவில்லை என்றால் இந்த அம்மா வெளியேறாது. ஓட்டுக்கு பைசா கொடுப்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக பங்களாதேஷ் வூடுருவி மக்களை உள்ளே விட்டு அவரகளது வோட்டை petrukondu ஹிந்துக்களை அடித்து விரட்டி துவம்சம் செய்வது இவருக்கு வழக்கமாகி விட்டது. மாணவர் போராட்டம் ஒன்றே வழி. இதே போல் ஒரு போராட்டம் சென்னையிலும் வெடிக்கலாம், அரசு மருத்துவரகளின் பாதுகாப்பு உறுதி செய்ய படாவிட்டால். முதலிலேயே திருச்செந்தூரை விவகாரத்தில் மக்கள் கொதித்து போய் இருக்கிறாரகள். மக்களின் மன நிலையை அறியாத அரசு மண்ணுக்குள் போகும் என்பதே காலம் காலமாக வரும் நீதி.


MADHAVAN
ஆக 28, 2024 11:14

இந்த கற்பழிப்புக்கு திட்டம் போட்டது பிஜேபி, அதை செய்தது ஒரு ஆர் எஸ் எஸ் கரண், இப்போ போராட்டம் செய்வதும் பிஜேபிகாரனுங்க தான்


Narayanan
ஆக 28, 2024 11:46

நாட்டில் எந்த கேட்டது நடந்தாலும் பிஜேபி சாயம் பூசும் செயலுக்கு வருந்துகிறேன்


Nermaiyanavan
ஆக 28, 2024 12:08

ஓ விளக்கு பிடித்த ஆள் நீ தாநா வெட்கமா இல்லையா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2024 15:03

அடமாதவா ..... உன்னுடைய ஊட்டுக்காரம்மா வாமிட்டு செஞ்சாலும் பாஜக காரணம் ன்னு சொல்லுவ .....


xyzabc
ஆக 28, 2024 20:57

உனக்கு மம்தா கண்டிப்பாக பதவி கொடுப்பாள் . உன்னிடம் எல்லா தகுதி இருக்கு மானம் கெட்டவனே


SIVA
ஆக 28, 2024 09:24

வங்கதேச கலவரம் போல் இந்தியாவிலும் நடக்கும் என்று மத சாற்பற்ற காங்கிரஸின் மத சார்பற்ற முஸ்லீம் தலைவர் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் நடக்க ஆரம்பித்து உள்ளது , கூடா நட்பு கேடாய் முடியும் என்று இங்கு ஒரு மத சார்பற்ற தலைவர் காங்கிரஸ் பற்றி சொன்னார் , நல்லது சொன்னா யார் கேட்கின்றாங்க , ஏண்டா அறிவாளிகால நீங்கதான் எதனை பரம்பரை யாக எதனை லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் சூடு சொரணை இல்லாமல் இவனுக தான் மறுபடியும் உங்களை ஆட்சில உக்கார வைக்கின்றார்கள் , நீங்க உங்க வேலையே மட்டும் பார்க்கலாம்ல , எதுக்கு அப்பாவி மக்களை கொடுமை படுத்துறீங்க ....


Barakat Ali
ஆக 28, 2024 08:26

மாணவா்கள் கல்வி ஒப்பந்த விதிகளுக்கு மாறாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் அவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


N.Purushothaman
ஆக 28, 2024 08:02

முதலில் மம்தாவின் ஆட்சி காலத்தில் எப்படி சிறுபான்மை இன மக்கள் தொகை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து உள்ளது என்கிற காரணத்த அங்கு உள்ள இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ...


Almighty
ஆக 28, 2024 07:14

மம்தாவின் 3ம் தர அரசியலுக்கு இப்பொழுது சாவு மணி அடிக்கும் சந்தர்பம் உள்ளது. மத்திய அரசு கை கட்டி வேடிக்கை பார்க்க கூடாது.


ramani
ஆக 28, 2024 07:01

பதவி விலகுவது மற்றுமல்ல கட்சியையே தடை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் போலிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை