உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஞ்சுநாத்துக்கு இப்படி ஒரு சிக்கல்

மஞ்சுநாத்துக்கு இப்படி ஒரு சிக்கல்

பெங்களூரு : பெங்களூரு ரூரல் தொகுதியில், துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எப்படியாவது வெற்றி பெறவைக்க, சிவகுமார் திட்டம் வகுக்கிறார்.சுரேஷை தோற்கடிக்க பா.ஜ.,வும் திட்டம் வகுக்கிறது. இவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத்தை, பா.ஜ., களமிறக்கியுள்ளது. அவரும் தொகுதியை சுற்றி வந்து, பிரசாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு போட்டியாக, இதே பெயரில் களமிறங்குவதாக டாக்டர் மஞ்சுநாத் என்பவர் அறிவித்துள்ளார். இவர் பஹுஜன் பாரத் கட்சி சார்பில் களமிறங்குகிறார். இவர்களின் பெயர் மட்டுமல்ல, இருவரின் தந்தை பெயரும் ஒன்றுதான். ஒரே மாவட்டம், தாலுகாவை சேர்ந்தவர்கள். இருவருக்கும் கவுரவ டாக்டரேட் பட்டம் கிடைத்துள்ளது.ஒரே பெயர் மற்றும் இன்ஷியலில், இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ