உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி., போலீஸ் ஸ்டேஷனில் சுந்தர் காண்ட் அரசியல் சர்ச்சை

ம.பி., போலீஸ் ஸ்டேஷனில் சுந்தர் காண்ட் அரசியல் சர்ச்சை

போபால்: ம.பி., மாநிலத்தில் போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ.,வினர் சுந்தர்காண்ட் படிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ம.பி., மாநிலத்தில் அமைந்துள்ள பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருப்பவர் கைலாஷ் விஜயவர்கியா. இவர் மீது நர்சிங் கல்லூரி குறித்த ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவிக்க காங்.,கின் முன்னாள் அமைச்சர் பி.சி சர்மா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அசோகா கார்டன் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் கூடாரம் அமைக்கப்பட்டு தெண்டர் ஒருவரின் பிறந்த நாளை முன்ன்னிட்டு பா.ஜ.,வினர் சுந்தர்காண்ட் படித்தனர். இது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷனிற்குள் பாடல்கள் பாடுவது விதிகளை மீறிய செயலாகும். இதற்கு அனுமதி அளித்தவர்களின் பெயரை நீக்க வேண்டும். இவ்வாறு நடக்காவிட்டால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் பக்ரீத் பண்டிகை மற்றும் கட்சி தொண்டர்களின் பிறந்த நாள் வருகிறது அதனை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டாடுவோம். அதற்காக விண்ணப்பிக்கவும் செய்வோம் என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., தலைவர் நரேந்திர சலுஜா 10 வருடங்கள் முதல்வராக இருந்ததாக கூறும் திக்விஜய்சிங், சாலைகளில் தொழுகை நடத்தும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் மதரஸாக்களில் நடக்கும் அநீதியை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை என்றார். இதனிடையே அசோகா கார்டன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி தொண்டர்களுடன் சென்ற திக்விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் போலீஸ் ஸ்டேஷனில் சுந்தர்காண்ட் படிப்பதற்கு அனுமதி அளித்த போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க போபால் போலீஸ் கமிஷனர் ஹரி நாராயண் சாரி ' ஷோ கால் நோட்டீஸ் ' அனுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 20, 2024 02:14

இந்ததிருட்டு ஊழல் கான் காங்கிரஸ்க்கு வோட்டை போடும் அறிவாளி ஹிந்துக்களை தான் திட்டவேண்டும்.


sankaranarayanan
ஜூலை 20, 2024 01:38

நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி கட்சியில் பழம்பெருந்தலைவர் அனுபவசாலி பேசும்பேச்சா இது ஏட்டிக்கு போட்டியா கூறுவது எழுபது வயதில் இருபது வயது கன்னியையை கரம்பிடித்த மஹாராஜா இவருக்கு மக்களின் வாழ்வைப்பற்றி என்ன தெரியும் தவறு செய்தால் தடிக்க வேண்டுமே தவிர அடுத்த மதத்தினரை தூண்டிவிடக்கூடாது


S. Gopalakrishnan
ஜூலை 19, 2024 23:51

திக்விஜய் சிங் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட வேண்டியவர் !


மேலும் செய்திகள்