உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வித்துறை மாபியாக்களிடம் ஒப்படைப்பு: பிரியங்கா சாடல்

கல்வித்துறை மாபியாக்களிடம் ஒப்படைப்பு: பிரியங்கா சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் நுழைவுத் தேர்வு - வினாத்தாள் கசிவு, நீட் முதுகலை தேர்வு - ரத்து, யு.ஜி.சி. நெட் தேர்வு - ரத்து, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு - ரத்து. இன்று நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான்.

வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து

பா.ஜ., ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதம் மற்றும் ஆணவத்தின் காரணமாக, வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, கல்லூரிகளில் துறைகள் காணாமல் போவது ஆகியவை நமது கல்விமுறையின் அடையாளமாக மாறியுள்ளன.

மிகப்பெரிய தடை

பா.ஜ., அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ., அரசு மாறியுள்ளது. நாட்டின் திறமையான இளைஞர்கள் பா.ஜ.,வின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொன்னான நேரத்தையும், தங்கள் முழு ஆற்றலையும் வீணடிக்கிறார்கள். பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
ஜூன் 24, 2024 20:31

தமிழகத்தில் திமுக என்ற மாஃபியா வின் கையில் தான் கல்வி துறை உள்ளது...இவளை அறியாமல் உண்மை இவர் வாயால் வெளிவந்துவிட்டது.. சபாஷ்


M Ramachandran
ஜூன் 23, 2024 19:23

உனக்குள் கட்சியெ தேச துரோகி களின் கைய்ய பாவையாகா இருக்கு மற்றும் தேச விரோதமாகா எதிரி நாட்டின் கைய்யக்கூலி பெற்று வயிற்றை வளகிறீர்கள். அதைய மறந்து விட்டு கத்து குட்டிய போல் பேசு வது ஒரு முதிர்ந்த கட்சியின் பொறுப்புள்ளவர் பேச்சா?


M Ramachandran
ஜூன் 23, 2024 19:18

கத்து குட்டி பிரியங்ஹா முதலில் உங்களுடன் ஊழலில் ஈடுபட்ட திராவிட கும்பல் தான் கல்வி மாபியாக்கள் என்பதை தெரிந்து கொண்டு மற்றவர்கள்மேல் குற்றம் சுமத்தலாம்


V RAMASWAMY
ஜூன் 23, 2024 19:13

பாம்பின் கால் பாம்பு அறியும்.


sethu
ஜூன் 23, 2024 18:40

இத்தாலி கும்மல் கிளம்பிடுச்சே


Priyan Vadanad
ஜூன் 23, 2024 18:26

அம்மா தாயே நீங்க விதைச்சீங்க./ இவுங்க தண்ணி ஊத்தி ஒரம் போட்டு பூச்சி புடிக்க வச்சி வழக்குறாங்க. யார குத்தம் சொல்ல?/ ஆக மொத்தத்துல எலயும் செடியும் காலியா போவப்போவுது.


பேசும் தமிழன்
ஜூன் 23, 2024 17:35

ஏம்மா..... இங்கே தமிழகத்தில் ஏராளமான பெண்கள்... தாலியை அறுத்து விதவையாகி விட்டார்கள்.... அதற்க்கு காரணம் கள்ளசாராயம்... எதெற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் நீயும்... உன் அண்ணன் ம்.ஆளையே காணோம்..... எங்கே போய் விட்டீர்கள் ???


Srinivasan Gopalan
ஜூன் 23, 2024 17:29

இவங்க கட்சியையே மாஃபியாவிடம் ரேட் பேசி குடுத்துட்டாங்களே


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 17:28

முதலில் சோஸலிசத்தைப் புகுத்தியதும் பின்னர் அது வேண்டாமுன்னு தாராளமயமாக்கல் மூலம் அன்னிய முதலாளிகளுக்கு திறந்து விட்டதும் ஒரே கட்சிதான். கொள்கை பல்டியில் உங்களை மிஞ்ச முடியாது. நீட் கொண்டு வந்த நீங்களே அதனை எதிர்ப்பதும் இதே வழிதான்.


Kasimani Baskaran
ஜூன் 23, 2024 17:26

அப்படியென்றால் மாபியாக்கள் நடத்தும் அணைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசே எடுத்துக்கொள்ளலாம் என்கிறீர்களா? இதை ஒரு தனி நபர் மசோதாவாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பாஜகவின் ஆதரவையே கூட பெறலாம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி