மேலும் செய்திகள்
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி
1 hour(s) ago
ஜோஹோ மெயிலுக்கு மாறினார் அமித் ஷா
1 hour(s) ago
முதல்வர் வேட்பாளர் நிதிஷ்!
1 hour(s) ago
கோலார்: கோலார் மாவட்டம், மாலுாரின் சந்தள்ளி கிராமத்தில், ஆனந்தமார்க்க ஆசிரமம், நான்கு ஏக்கரில் உள்ளது. இதை ஆச்சார்யா சின்மயானந்தா சுவாமிகள், 70, நிர்வகித்து வந்தார்.ஆசிரமம் சார்பில் நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லுாரி தொடர்பாக, இரு தரப்பினர் இடையே 22 ஆண்டுகளாக பிரச்னை இருக்கிறது. இவர்களிடையே பல முறை கைகலப்பு ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், ஆசிரமத்தில் ஆச்சார்யா சின்மயானந்தா சுவாமிகள், குளித்துக் கொண்டிருந்தார். அவரை, சிலர் வெளியே இழுத்து வந்து உருட்டுக் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுவாமிகள், மதியம் 3:00 மணியளவில் உயிரிழந்தார்.கொலை தொடர்பாக, ஆச்சார்யா தர்ம பிராணானந்தா, பிராணேஸ்வரானந்தா, அருண்குமார் ஆகிய மூவரை, மாலுார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த கொலைக்கு சூத்திரதாரி ஆச்சார்யா தர்ம பிராணானந்தா என, கூறப்படுகிறது.சம்பவம் நடந்த ஆசிரமத்தை, கோலார் எஸ்.பி., நாராயணா பார்வையிட்டார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago