உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக

இன்று இனிதாக

ஆன்மிகம்

தேய்பிறை பிரதோஷம்

l சித்திரை மாதம் தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, சிவன் கோவில்களில் நந்தீஸ்வரர், சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன.lநேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சிக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: இறைவன் - இறைவி உட்பிரகார வலம். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.l நேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஸ்வரர், ஏகாம்பரீஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: உட்பிரகார வலம். இடம்: தருமராஜா ஏகாம்பரீஸ்வரர் கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.l நேரம்: மாலை 4:30 மணி: நந்தீஸ்வரர், நாகலிங்கேஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.l நேரம்: மாலை 4:30 மணி: கொடி கம்பம் நந்தீஸ்வரர், சோமேஸ்வருடன் பஞ்ச லிங்கங்களுக்கு அபிேஷகம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.l நேரம்: மாலை 4:30 மணி: நந்தீஸ்வரர், சுந்தரேஸ்வருக்கு அபிேஷகம். இடம்: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர்.

60ம் ஆண்டு விழா

l திரவுபதி அம்மன் கோவில் 60ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், நாடகம் இடம் பெறுகிறது. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை: தீ மிதி திருவிழா; 8:30 மணி: அம்மன் தேர் புறப்பாடு. இடம்: அம்பேத்கர் மைதானம், சேவாஸ்ரமம் பள்ளி எதிரில், சுதந்திர நகர், ஸ்ரீராமபுரம்.

ஸ்ரீராமானுஜர் உற்சவம்

l ஸ்ரீராமானுஜர் சித்திரை திருவாதிரை உற்சவத்தை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: திவ்ய பிரபந்தம், சேவாகாலம், சாத்துமுரை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம். இடம்: பான் பெருமாள் கோவில், கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு, பெங்களூரு.

பஜனை உற்சவம்

l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பொது

களிமண் பயிற்சி

l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

கோடை பயிற்சி

l பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.* ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.

காமெடி

l அன்டர்கிரவுண்டு வோர்ல்டு காமெடி கிளப் வழங்கும் லேட் நைட் ஜோக்ஸ். நேரம்: இரவு 10:10 மணி முதல் 11:40 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்டு வோர்ல்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்