உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல் ஹெலிகாப்டர் விமானி தமிழக பெண் சாதனை

முதல் ஹெலிகாப்டர் விமானி தமிழக பெண் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் கடற்படையின் முதல் ஹெலிகாப்டர் பெண் விமானி என்ற பட்டத்தை பெற்று, தமிழகத்தின் அனாமிகா என்பவர் சாதனை படைத்துள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமான தளத்தின் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 102வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.இந்நிகழ்வில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதையடுத்து, இப்பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இதில், கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் விமானி என்ற பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனாமிகா பெற்று சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ