உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான ஆய்வறிக்கையை தமிழக அரசு தரவில்லை

மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கான ஆய்வறிக்கையை தமிழக அரசு தரவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒருங்கிணைந்த இயக்க அறிக்கை மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகியவை இல்லாமல், வெறுமனே திட்ட அறிக்கையை மட்டும் தமிழக அரசு தயார் செய்து அனுப்பியுள்ளது. இதன் காரணமாகவே, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி கேட்டிருந்த கேள்விக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டொக்கான் சாஹு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது: மெட்ரோ ரயில் கொள்கை என்று ஒன்று உள்ளது. இந்த கொள்கையின்படி, எந்த ஒரு நகரத்திலும் மெட்ரோ ரயில் அமைக்கப்பட வேண்டுமென்றாலும், குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, திட்டமிடப்படும் வழித்தடத்தை ஒட்டி அமைந்த, வேறு சில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கி, ஒருங்கிணைந்த இயக்க திட்டமான சி.எம்.பி.,யும் (காம்ப்ரஹென்சிவ் மொபிலிட்டி பிளான்) அளிக்க வேண்டும்.இன்னொன்று, அந்த குறிப்பிட்ட வழித்தடம் பொருத்தமாக இல்லை என்றாலோ அல்லது பல்வேறு காரணங்களால் அது கைவிடப்படும் சூழ்நிலை உருவானாலோ, அதற்கு மாற்றாக வேறொரு புதிய வழித்தடத்திற்கு ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும்.மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையோடு சேர்த்து, இந்த இரண்டு அறிக்கைகளையும் மெட்ரோ ரயில் கொாள்கையின்படி மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ விரிவான திட்ட அறிக்கை மட்டும் தான் சமர்ப்பித்துள்ளது. அதன் காரணமாகவே, மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஒரு திட்டத்தை கேட்டு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும். ஆனால், ஒரு திட்டத்திற்கான ஒப்புதலை பெறுவதற்கு முறையான வழிமுறைகளைக்கூட கடைப்பிடிக்காமல், மத்திய அரசுக்கு அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

SARAVANAN A
ஜூலை 28, 2024 17:20

மதுரை, கோவை மெட்ரொ திட்டங்களுக்கான ஆரம்ப கட்ட பணியான விரிவான திட்ட அறிக்கையே இன்னும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கபடவில்லை. ஆனால் அதற்குள் மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள் என்கிறார் ஒருவர். இன்னொரு பெரிய அரசியல்வாதியோ மத்திய நிதியமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று காட்டமாக அறிக்கை விடுகிறார். உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள், இருப்பவர்கள் ஒரு விஷயத்தின் உண்மைதன்மை பற்றி தெரிந்து கொள்ளாமல் பாஜக அரசை குற்றம் சுமத்த வேண்டும் என்ற குறுகிய மனத்தோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி இறைப்பதை நிறுத்திக் கொண்டு, வாக்களித்த மக்களுக்கு உண்மையுள்ளவர்களாக உழைக்க வேண்டும்.


sangarapandi
ஜூலை 28, 2024 09:24

மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்களை அமைப்பதற்காக திட்ட அறிக்கைகளை துறை சார்த்த வல்லுநர்கள்தான் தயாரிப்பார்கள், அவர்கள் எப்படி முழுமையான திட்ட அறிக்கையை தயாரிப்பதில் கோட்டை விட்டார்கள் என்ற விபரம் தெரியவில்லை . என்றாலும் முழுமையான திட்ட அறிக்கைக்கு தேவையான விபரங்களை உடனடியாக மத்திய அரசும் ரயில் துறையும் பெற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .தவிர அகல ரயில் தடமாக மாற்றப்பட்ட கோவை -பொள்ளாச்சி -மதுரை வழித்தடத்தில் கோவை முதல் மதுரை, ராமேஸ்வரம் தூதுக்குடி , திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டுகிறேன்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 27, 2024 07:30

நெறியாளர்கள் சுகிதா விஜயன் கார்த்திகேயன் கார்த்திகை செல்வன் ஹரி அசோகா கார்கே போன்றவர்கள். வெட்கமாக இல்லையா


PANDIAN SWAMYNATHAN
ஜூலை 28, 2024 00:36

ஏன் அவா உங்கவா கிடையாதா


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 06:49

அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டு நாலு அடிமுட்டாள்களை வைத்து நடத்தும் ஐடி விங்குக்கு இதெல்லாம் எப்படி தெரியும்.


Mani . V
ஜூலை 27, 2024 06:22

அப்ப மத்திய அரசை குறை சொல்லி உருட்டியதெல்லாம் பொய்யா


M Ramachandran
ஜூலை 27, 2024 03:18

கேரளா கர்நாடகாவா எதிர் காட்சியாகா இருந்தாலும் முன்னே நிற்பார்கள்


M Ramachandran
ஜூலை 27, 2024 03:17

நீங்கள் பணம் மட்டும் கொடுங்கள் அல்லது வெளி நாட்டு நிதி உதவிக்கு அனுமதி தாருங்கள் நாங்கள் பார்த்து கொல்கிறோமாம் என்ற மேடைப்புடன் உள்ளவர்கள் எப்படி திட்ட வரை களை கொடுப்பார்கள்???


Palanisamy T
ஜூலை 26, 2024 19:22

திட்ட அறிக்கையை மட்டும் தந்தார்கள் ஆய்வறிக்கையை தரவில்லை யென்கின்றார்கள் எந்த திட்ட அமலாக்க மாகயிருந்தாலும் அதிலொரு அணுகு முறையுள்ளது. நிர்வாக விதிமுறைத் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்தியாவை விட்டு வெளியேறிய ஆங்கிலேயர்கள் நல்ல ஆங்கிலத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் இந்திய நாட்டிற்கு விட்டுச் சென்றார்கள். நாட்டிற்கு வளர்ச்சி வேண்டுபவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அவற்றையெல்லாம் அறிந்து நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநில அரசு தந்த திட்ட அறிக்கை யை திருப்பியனுப்பி ஆய்வறிக்கையை கோரியிருக்கலாம். ஏன் அவர்கள் ,அதைச் செய்யவில்லை


rama adhavan
ஜூலை 26, 2024 20:20

தப்பு செய்தவன் தானே கேட்க வேண்டும். அதை செய்யாமல் தமிழக அரசு ஏன் இருந்தது என கேளு போய் வீரம் இருந்தால். குப்பைக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்.


வேலு அறிவழகன்
ஜூலை 27, 2024 13:34

குட்


TSRSethu
ஜூலை 26, 2024 17:52

மெட்ரோ திட்டம் கோவை மதுரை மக்களுக்கு அவசியமற்ற ஒன்று என மாநில அரசு நினைக்கிறதோ ?


sridhar
ஜூலை 26, 2024 20:43

அப்படி நினைக்காது , மதுரை கோவையில் உள்ள சில கோவில்களை இடிக்கும் வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள் .


TSRSethu
ஜூலை 26, 2024 17:47

இவர்களுக்கு உண்மையில் மெட்ரோ திட்டத்தை கோவை மதுரை நகரங்களில் கொண்டு வர அக்கறையில்லை. நாம் தான் எல்லா விபரங்களையும் விளங்கங்களையும் தந்து திட்டத்தை நிறைவேற்றி பெற வேண்டும். அதை விடுத்து அரசியல் பகைமை காட்டினால் நமக்குத்தான் நஷ்டம். சென்னை போல கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் ? ஒரு வேளை இந்த திட்டங்கள் வேண்டமென மாநில அரசு நினைக்கிறதோ?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ