மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
கொழும்பு, இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், 91, வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.நம் அண்டை நாடான இலங்கையில் தமிழரசு கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் சம்பந்தன். இவர், கிழக்கு திரிகோணமலையின் பார்லிமென்ட் உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வந்தார். வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சம்பந்தன் காலமானார். இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அந்நாட்டு பார்லிமென்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.அவரது மறைவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன் சமூக வலைதளத்தில், 'இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன்.'அவருடனான என் இனிய நினைவுகள், எப்போதும் நினைவுகூரப்படும். சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என, பதிவிட்டுள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago