உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிராகன் பழ விளைச்சலில் ஆசிரியை

டிராகன் பழ விளைச்சலில் ஆசிரியை

பெலகாவி மாவட்டம், சென்னம்மன கித்துார் தாலுகா, மேட்டியாலா கிராமத்தை சேர்ந்தவர் சுரேகா சிவானந்தா பூஜார், 66. இவர் ஆசிரியை, தலைமை ஆசிரியை, மண்டல கல்வி அதிகாரி என, 39 ஆண்டுகள் கல்வி துறையில் பணியாற்றினார்.ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு, இதே கிராமத்தில் 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கணவர் சிவானந்த பூஜார், இரண்டு மகன்கள் காய்கறிகள், கீரை பயிரிட்டு வந்தனர். விடுமுறை காலத்தில், தானும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

இயற்கை உரம்

தற்போது பணி ஓய்வுக்கு பின், புதிய விளைச்சலாக, 1 ஏக்கர் நிலத்தில், டிராகன் பழம் விளைவித்து வருகிறார். இதன் உற்பத்திக்கு ரசாயனம் கலக்காமல், இயற்கை உரம் பயன்படுத்தி வருகிறார்.குடும்பத்தினர் வேண்டாம் என்று சொன்னாலும், டிராகன் பழம் விளைவிக்க ஆரம்பித்தார். 1 ஏக்கரில், 9 அடி இடைவெளியில் ஒரு செடி வீதம், 2,900 செடிகள் நட்டுள்ளார். ஆங்காங்கே சிமென்ட் கம்பங்கள் நட்டு, கயிறுகளுடன் கட்டப்பட்டுள்ளன. இப்படி 726 சிமென்ட் கம்பங்கள் நட்டுள்ளார்.தோட்டத்திலேயே இலைகள், மாட்டு சாணம் கலந்த உரம் தயாரித்து, செடிகளுக்கு போட்டுள்ளார். பயிரிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், பழங்கள் காய்க்க ஆரம்பித்துஉள்ளன. ஒவ்வொரு செடியில் இருந்தும் 8 முதல் 32 பழங்கள் வரை காய்த்துள்ளன. 25 முதல் 30 ஆண்டுகள் வரை செடிகளிலிருந்து பழங்கள் கிடைக்கும்.

பெலகாவியில் விற்பனை

பழங்களை அறுவடை செய்து, பெலகாவி சந்தையில் விற்று வருகிறார். ஒவ்வொரு பழமும், 325 கிராம் முதல் 850 கிராம் எடை கொண்டுள்ளது. 1 கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெயில் காலங்களில் இலைகளில் கறுப்பு, சிவப்பு எறும்புகள் தாக்கியன. இதற்கும் இயற்கை முறையிலேயே உரம் தயாரித்து போட்டதால், இலைகள் பாதிக்கப்படவில்லை. இவரது சாதனையை அறிந்த மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், கடந்தாண்டு 'சிறந்த விவசாயி' என்ற விருது வழங்கி கவுரவித்தது.டிராகன் பழத்தில் அதிகமான கனிம சத்துக்கள் அடங்கி உள்ளது. இதை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். புற்றுநோய் செல்கள் அழிக்கும் சக்தியும் உள்ளது.நானாக விருப்பப்பட்டு தான், டிராகன் பழங்களை வளர்க்க முற்பட்டேன். தற்போது நல்ல லாபம் கிடைக்கிறது. வீட்டில் பணியை முடித்து விட்டு, விவசாயத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக உள்ளது.- சுரேகா- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை