உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம்பெண் ஆபாச படம் வெளியிட்ட வாலிபர் விமான நிலையத்தில் கைது

இளம்பெண் ஆபாச படம் வெளியிட்ட வாலிபர் விமான நிலையத்தில் கைது

குடகு, : குடகு, சித்தாபுரா நெல்லுதுக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மகன் அப்ரித், 23. இவர், தன் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்தார். காதலை கூறியபோது, இளம்பெண் ஏற்கவில்லை. ஆனாலும் தன்னை காதலிக்கும்படி, இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தார்.இதற்கிடையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வேலைக்காக துபாய்க்கு அப்ரித் சென்றார். அங்கிருந்து இளம்பெண்ணிடம் பேசிய அவர், 'என்னை காதலிக்காவிட்டால் உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.இதற்கு இளம்பெண் பயப்படவில்லை. இதனால் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரில், அப்ரித் மீது சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் துபாயில் இருந்து மும்பைக்கு, அப்ரித் விமானத்தில் வருவதாக, சித்தாபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் மும்பை சென்ற போலீசார், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து, வாடகை காரில் ஏற முயன்ற, அப்ரித்தை கைது செய்தனர். அவரை, சித்தாபுரா அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்