மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
புலிகேசி நகர்: வாலிபரை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு பானஸ்வாடியில் வசித்தவர் அஜித், 35. தொட்டகுப்பி அருகே உள்ள பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.புலிகேசி நகர் தொட்டகுண்டு தொட்டகுந்தே சதுக்கம் பகுதியில் வந்தபோது, பைக்கை வழிமறித்த மர்ம நபர்கள், அஜித்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.அஜித்தை கொன்றவர்கள் யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. அஜித் சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். ஆனால் வட்டி கொடுக்கவில்லை.இதனால் ஏற்பட்ட தகராறு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் சென்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர். அஜித்தை கொன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago