உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவலிங்கத்துடன் தனக்கும் அபிஷேகம் செய்ய வைத்த தேஜ்

சிவலிங்கத்துடன் தனக்கும் அபிஷேகம் செய்ய வைத்த தேஜ்

பாட்னா : பீஹாரில் உள்ள ஒரு கோவிலில் சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி இருந்த, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாபுக்கு, அகோரி ஒருவர் பாலாபிஷேகம் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரின் எதிர்க்கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவரது மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், அவ்வப்போது ஆன்மிகம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்பதை, வீடியோக்களாக தன் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடந்த பூஜையின் போது, சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி அவர் அபிஷேக ஆராதனையில் பங்கேற்ற வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், 'உண்மையின் இறுதிச் சின்னம் மஹாதேவ். அவரை அரவணைப்பது, நம் ஆழமான உணர்வுகளை தழுவுவது போன்றது. குழப்பங்களுக்கு நடுவே அமைதியைக் காண மஹாதேவனே சரணாகதி' என, குறிப்பிட்டுள்ளார்.அந்த வீடியோவில், தேஜ் பிரதாப், சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி உள்ளார். சிவலிங்கத்துக்கும், தேஜ் பிரதாபுக்கும், அகோரி ஒருவர் விதவிதமான புனித நீர் மற்றும் பாலை எடுத்து அபிஷேகம் செய்கிறார். இந்த வீடியோ, பீஹார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது, கிருஷ்ணர் வேடமணிந்து விழாவில் பங்கேற்ற வீடியோவை தேஜ் பிரதாப் வெளியிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kulandai kannan
ஜூலை 09, 2024 14:50

கடவுள் சிலைகளை உடைப்பவர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.


தத்வமசி
ஜூலை 09, 2024 10:31

அட, இது நமது திராவிட குழந்தைகளுக்கு தெரியாத வரையில் நல்லது. கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.


Senthoora
ஜூலை 09, 2024 10:51

திராவிடம் அல்ல எந்த மானிடனுக்கும் இந்த மாதிரி மூட நம்பிக்கை வராது. ஒரே ஒரு ஆள் இருக்கிறார், அடுத்த தேர்தல் வரும்போது செய்வார்.


shyamnats
ஜூலை 09, 2024 08:27

வன்மையாக கண்டிக்கத் தக்கது. பொருளாதார குற்றங்கள் புரிந்து ஜாமீனில் இருக்கும் தந்தையின் வாரிசுகள் இவ்வாறு நடப்பது நம்முடைய ஆன்மிக கொள்கைகளை கேவலப்படுத்துவது போல் உள்ளது.


Lakshminarayanan
ஜூலை 09, 2024 07:38

தெய்வம் வெளியே இல்லை. ஒவ்வொருவரின் உள்ளே ஆன்ம வடிவில் இருப்பதே தெய்வம். அதுவே ஸாக்ஷி பூதமாக இருப்பது. அதனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. தன் உள் இருக்கும் தெய்வத்தை வெளியே தேடுவது, வேஷம் போடுவதற்கு ஒப்பாகும். இந்த உலகத்தில் உள்ள மிக மிக பெரிய ஸாக்ஷி, சக்தி மனஸாக்ஷி.


Yes
ஜூலை 09, 2024 06:07

வட நாட்டு பயல்களுக்கு புத்தியே கிடையாது.


Yes
ஜூலை 09, 2024 06:06

அடேய் லிங்கம் புனிதமானது.அதை கட்டி பிடித்து அதன் மகிமையை ஏண்டா பாழாக்கறே.


Senthoora
ஜூலை 09, 2024 07:40

தேவர்களுக்கே கடவுள் விக்கிரகங்களை தொடுவதுக்கு அனுமதி இல்லை, இப்படி இவர் சிவலிங்கத்தை அரவணைப்பது தவறில்லை, ஆனால் அதுக்குரிய பக்குவம், ஆச்சார, அனுஷ்டானங்களை பின்பற்ற வேண்டும், அது இல்லையேல் அதன் பலனை சீக்கிரம் அனுபவிப்பார், இயேசுநாதராக நடிப்பதுக்கு கூட பல நடிகர்கள் தயக்கம் காட்டுவார்கள். MGR யேசுநாதராக நடித்த படம் பாதியில் யாரோ சொன்னதால் பாதியிலே நிறுத்திவிட்டனர்


Priyan Vadanad
ஜூலை 09, 2024 01:45

இதென்ன பிரமாதம். கடந்த தேர்தலுக்கு முன்னிருந்து இங்கு ஒருவர் விதவிதமான கெட்டப்பில் கலர் கலராய் தொப்பி, கலர் கலராய் சால்வை, உத்திராட்ச கொட்டை மாலை, நெற்றியில் பழைய ஒரு ரூபாய் சைஸ் குங்கும பொட்டு இத்யாதி இத்யாதி காட்சியருளி கடைசியில் முத்தாய்ப்பாக நான் தெய்வப்பிறவி என்றாரே


Ramesh
ஜூலை 09, 2024 06:47

சமச்சீர் கல்வி படித்தவனுக்கு இந்தியில் ஒருவர் என்ன சொன்னார் என்பது எப்படி தெரியும்? சும்மா அடிச்சு விட வேண்டியதுதான். தமிழகத்தை கொல்டியிடம் கொடுத்ததினால் வந்த வினை.


sankaranarayanan
ஜூலை 09, 2024 00:26

விதமான வேடங்கள் அணிந்தும் லிங்கங்களை கட்டியணைத்து அபிஷேகம் செய்து கொண்டாலும் இவர்களும் இவர்களின் தாய் தந்தை செய்த பாபங்களிலிருந்து இவர்களுக்கு இந்த ஜன்மத்தில் விடிமோட்சமே இப்புவியில் கிடையாது மக்களுக்கும் தேசத்திற்கும் செய்த கொடுமைகள் கணக்கிலண்டாகாது


அப்புசாமி
ஜூலை 09, 2024 00:17

காசு குடுத்தா என்ன வேணா செய்யும் கும்பல்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 09, 2024 12:09

ட்ராவிடியதுக்கு வேண்டாத வேலையை இண்டிக்கூட்டணி ஆட்கள் செய்கிறார்கள். உங்க கட்டுமர புதல்வனை எதிர்த்து கேள்வி கேட்கச்சொல்லேன் பாப்போம் அப்படியே பிரசுரிக்கவும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை