உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா வாழ்த்து

தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இன்று (ஜூன் 02) தெலுங்கானா மாநில உருவான நாளை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் சோனியா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், தெலுங்கானா மாநில மக்கள் எனக்கு மிகுந்த மரியாதையையும், அன்பையும் கொடுத்துள்ளனர். வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாக்க, ஆட்சி அதிகார பொறுப்பை மக்கள் எங்கள் கட்சியிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

உத்தரவாதம்

இவை அனைத்தையும் நிறைவேற்றுவது எனது கடமையாக கருதுகிறேன். இந்த புனித நாளில், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில் எந்தக் கல்லையும் விட்டு வைக்காது என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு சோனியா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஜூன் 02, 2024 19:25

சோனியா வயிதெறிச்சல்


ganapathy
ஜூன் 02, 2024 14:48

தெலுங்கானா மக்களை 1947 இருந்து ஏமாற்றி கடைசில வேறு வழி இல்லாம அவங்களை சபித்து உன்னோட சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்த போது பல ரத்தக்களரிகளை நிகழ்த்தி அந்த மாநிலத்தை உருவாக்கியதுதான் உன்னோட உண்மையான ஜனநாயக வரலாறு. இதுல வாழ்த்து வேற.


ஆரூர் ரங்
ஜூன் 02, 2024 14:14

பிஜெபி ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட், உத்தர்காண்ட்,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அமைதியாக உருவாகின. ஆனால் ஒரே மொழி பேசும் ஆந்திராவை காங்கிரஸ் இரண்டாகப் பிரித்து தெலங்கானாவை உருவாக்கிய நாளிலிருந்து இன்றுவரை இரு மாநிலங்களுக்குமமடையே பகை மூண்டதுதான் மிச்சம். இதில் வாழ்த்து எதற்கு?சாதனையல்ல. வேதனைதான் மிச்சம் .


GMM
ஜூன் 02, 2024 13:22

அரசு முத்திரை உருவாக்கிய மாநில காங்கிரஸ் ஆக்கிறமிப்பாளர் நினைவு சின்னம் சார்மினார் சேர்த்து இருக்க. கூடாது. ஆங்கிலம், இந்தி,மாநில மொழி மட்டும் இருக்க வேண்டும். எந்த மாநில அரசு முத்திரையிலும் அந்த நாட்டில் பிறக்காத உருது போன்ற அந்நிய மொழி இருக்க கூடாது. மக்கள் உருது படிக்கலாம், பேசலாம். இதனை சரி செய்து மாநிலத்தை உருக்கிய சோனியா வாழ்த்து தெரிவிக்கலாம்.


Ramesh Sargam
ஜூன் 02, 2024 12:32

தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு. ஆகையால் இந்த வாழ்த்துக்கள். உண்மையாக அம்மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள் அல்ல. ரேவந் ரெட்டிக்கு வாழ்த்துக்கள்.


S Sivakumar
ஜூன் 02, 2024 12:21

வாழ்த்து சொல்ல தகுதி இருக்கிறதா? பல வருடங்களாக ஊரவைத்த மகா கட்சி


மேலும் செய்திகள்