உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு: ரூ. 20 லட்சம் வெகுமதி அறிவிப்பு

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு: ரூ. 20 லட்சம் வெகுமதி அறிவிப்பு

தோடா, ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நான்கு பேரின் புகைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் ரெய்சியில் கடந்த 9ம் தேதி, சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நிலை தடுமாறிய பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், ஒன்பது பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜம்முவில் இரு வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள சுகாய் கிராமத்தில் நேற்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பல வீடுகள் சேதமடைந்தன. ஆனால், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.அதேபோல், தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்காலிக முகாம் மீது இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கு இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.இதில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் கபீர்தாஸ் என்பவர் பலியானார். அது மட்டுமின்றி பாதுகாப்பு படையினர் தரப்பில் ஆறு பேர் காயமடைந்தனர்.இறுதியில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு சிலர் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதால் தோடா, கதுவா, ரெய்சி மாவட்டங்களில் வீடு வீடாக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.இதற்கிடையே தாக்குதல்கள் நடத்தியதாக நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை காஷ்மீர் போலீசார் நேற்று வெளியிட்டனர். இவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல் தருபவர்களுக்கு அல்லது கைது செய்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Avudaiappan S
ஜூன் 14, 2024 07:37

வீட்டுக்கு வீடு சோதனை நடத்தி அவர்களை பிடித்து தண்டிக்க வேண்டும்.இவர்களது மனநிலை என்றுதான் மாறுமோ?


Ramesh Sargam
ஜூன் 13, 2024 11:43

அவர்களை கண்டவுடன் போட்டுத்தள்ளும் மக்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்.


Lesly Loyans
ஜூன் 13, 2024 09:19

வருசத்துக்கு 2 டைம்ஸ் பண்டிகை பிரியாணி குடுத்தால் போதும் தமிழன் நாய்விட அவங்களுக்கு விசுவாசமா இருப்பான். 5 வருசத்துக்கு ஒரு முறை ஓட்டுக்கு 1000 ரூ குடுத்தால் போதும், எவ்லோபெரிய கொள்ளைக்காரனுக்கும் விசுவாசமா இருப்பான்.


Naga Subramanian
ஜூன் 13, 2024 08:30

Everyone are looking similar. Not much difference.


முகேசு
ஜூன் 13, 2024 07:58

எல்லோரும்.ஒரே மாதிரியா இருக்காங்களே கோவால்


A
ஜூன் 13, 2024 08:18

Manufacturing defect.. cannot rectify


RAJ
ஜூன் 13, 2024 07:26

உங்களுக்கு என்ன வேணும்... பிடிக்கலைன்னா நாட்டைவிட்டு வெளியே போ....


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 07:23

நம் நாட்டு மக்களின் வரிபணத்தை சாப்பிட்டு விட்டு.... நமது உப்பை சாப்பிட்டு விட்டு..... அயல் நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் இந்த நச்சு களைகள் அகற்றப்பட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்