| ADDED : ஜூன் 08, 2024 04:29 AM
ஏரிக்கு மறுவாழ்வு வருமா?மழை நீர் தேங்க இடமில்லாமல் காணாமல் போனது ஏரிகள். இதனால் தான் உலகமதி குன்றில் பிறக்கிற நீர், ஹென்றீஸ், ஓரியண்டல், டாங்க் பிளாக் பகுதிகளில் ஓடியாடி வரும் மழை நீர், கென்னடிஸ் ஏரியில் வந்து சேரும். அந்த ஏரி நிரம்பின பின் அசோக் நகர், வழியாக உரிகம் பேட்டை கால்வாய் மூலம் சொர்ண குப்பம் ஏரிக்குள் போய் சேரும். இது தாத்தா காலத்து பழைய ஸ்டோரி.ஆனால், கென்னடிஸ் ஏரியையே காணோம். வெறும் கருவேல மரத்தோப்பாக மாறியிருக்கு. கால்வாயும் இல்லை; தண்ணீர் தேங்க இடமும் இல்லை. இதனால் தான், உ.பேட்டை வீடுகளில் தஞ்சம் அடைகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக மழை காலத்தில் வேறு விதியில்லாமல், அங்கிருப்பவங்க 'ஜலவாசம்' செய்றாங்க.கோடிக்கணக்கில் திட்டம் போடுகிற அரசு, காணாமல் போன கென்னடிஸ் ஏரிக்கு மறுவாழ்வு தருமா அல்லது அவைகளையும் வீட்டுமனை ஆக்கிடுவாங்களான்னு ஊரை தெரிஞ்சவங்களின் அங்கலாய்ப்பு.எப்போ வரும் தேர்தல்?அசெம்பிளி, பின்னர் செங்கோட்டை பெர்ய தேர்தல்களும் நடந்து முடிந்தாச்சு. ஆனால் முனிசி., யின் இரண்டாம் கட்ட தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தான் இன்னமும் தேர்தல் நடத்தல.இது யார் பொறுப்பு; சில கவுன்சிலர்கள் கலக்கத்தில் இருக்காங்க. ஆனாலும், இப்பவே தலைவர் ஆகி விட்டதாகவே 'ஜிஜி' பவரை 'யூஸ்' செய்து அதிகாரிகளை மிரள வைப்பவரும் நடமாட்டத்தில் இருக்காராம்.நகர வளர்ச்சி குழும தலைவர் இருக்கையும் காலியாகவே இருக்குது. இப்பதவிக்கு ரெண்டு அசெம்பிளிகாரர்கள் பரிந்துரை படி தான், அரசு நியமிக்குமாம். பொன்னான நகரில் மேடமே சரணமுன்னு ஆடி பாடுவோருக்கு வாய்ப்பு நிச்சயம்னு குதிக்கிறாங்க. ஆனால், கிராமத்து லட்சுமி கடாட்சம் உள்ள பள்ளிக்காரர் பக்கம் தான் வசந்த காற்று வீசுதாம்.தப்புக்கணக்கு! 'இண்டியா' கூட்டணி வெறும் தேசிய அளவில் மட்டும் தான். நம்ம மாநிலத்தில ஒப்புக்கு கூட கண்டுக்கல. 28யும் பறிச்சிட போவதாக மாநில ஆட்சி கட்சிக்காரங்க முடிவு செஞ்சாங்க. கூட்டணி கட்சியினரின் ஓட்டுகள் மட்டுமே சும்மா வந்திடும்னு இங்குள்ள கைக்காரங்க நெனச்சா எப்படி. தேசமே தம் வசம் வைத்துள்ள பூக்காரர்களே, புல்லுக் கட்டை ஏத்துக்கலையா.மந்திரி குடும்ப உறவுகளுக்கு தான் சீட் என்றால் மத்தவங்க எல்லாம் என்னாவது. கைக்காரங்களோட தப்புக்கணக்கு, சீட் கிடைக்காதவங்களோட, 'உள்குத்து' வேலைகளால் தான் சிங்கிள் டிஜிட் ரிசல்ட். இது புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சிருக்குமா.