உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணி தொடர்கிறது!

கூட்டணி தொடர்கிறது!

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் என் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். மகாபாரதத்தில் அர்ஜுனன் மீனின் கண்ணுக்கு குறி வைத்ததை போல், எங்கள் அனைவர் இலக்கும் சட்டசபை தேர்தல் மீது உள்ளது. சரத் பவார், தலைவர், தேசியவாத காங்., சரத் பவார் அணி

சித்தராமையாவின் திட்டம்!

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் சில துணை முதல்வர்கள் தேவை என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். தற்போது உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் அதிகாரத்தை குறைக்க, அவரது சூப்பர் திட்டம் இது. இந்த இருவரும் போடும் சண்டையால், ஆட்சி நிர்வாகம் சீரழிந்து போயுள்ளது.பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

எதையும் செய்யவில்லை!

நில மோசடி வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தான் தந்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வென்று ஆட்சியை பிடிக்கும். பழங்குடியினர் பகுதிகளிலும் அதிக தொகுதிகளை வெல்வோம்.ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை