மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
28 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
28 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
39 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
40 minutes ago
திருவனந்தபுரம்:காருக்குள் சிக்கிய இரண்டு வயது குழந்தை ஒரு மணி நேர பரபரப்புக்கு பின் மீட்கப்பட்டது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கானுாரை சேர்ந்தவர் நந்து. மனைவி ரோகினி. இவர்களது இரண்டு வயது மகன் ஆரவ். சம்பவத்தன்று குழந்தையை காருக்குள் அமர்த்தி விட்டு நந்து காரை கழுவிக் கொண்டிருந்தார்.காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென சாவியில் இருந்த கார் லாக் பட்டனை அழுத்தியதால் கதவுகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து பல்வேறு சைகைகள் மூலம் குழந்தையின் கையில் இருந்த சாவியில் திறக்கும் பட்டனை அழுத்த முயற்சி மேற்கொண்டனர். எனினும் அது பலன் அளிக்கவில்லை.கார் ஏர்பேக் அமைப்பைக் கொண்டதால் கண்ணாடியை உடைக்கும் போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் தீயணைப்புத் துறையினர் அந்த முயற்சியையும் கைவிட்டனர். இறுதியில் மாற்று சாவி கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு பின் கார் திறக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. அதன் பிறகே பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
28 minutes ago
28 minutes ago
39 minutes ago
40 minutes ago