உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டடம் இடிந்து 3 பேர் பலி

கட்டடம் இடிந்து 3 பேர் பலி

புதுடில்லி டில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இரண்டு மாடி கட்டடத்தில் ஆடை தொழிற்சாலை இயங்கி வந்தது. அந்த கட்டடத்தில் நேற்று சீரமைப்பு பணி நடந்து வந்தது. அப்போது திடீரென இரண்டு மாடிகளில், ஒரு மாடி இடிந்து விழுந்தது. இதில், அங்கு பணியாற்றிய சிலர் சிக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்