உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவி காலியாக இல்லை காங்., முன்னாள் எம்.பி., சுரேஷ் விரக்தி

முதல்வர் பதவி காலியாக இல்லை காங்., முன்னாள் எம்.பி., சுரேஷ் விரக்தி

பெங்களூரு: “முதல்வர் பதவி காலியாக இல்லை,” என, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் கூறியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:துணை முதல்வர் சிவகுமார், முதல்வராக வேண்டும் என, மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.முதல்வர், துணை முதல்வர் பதவி விவகாரம் குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். மாநிலத்தில் இப்போது முதல்வர் பதவி காலியாக இல்லை.

10 பேருக்கு தகுதி

அமைச்சர்கள் சிலர், கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். பத்து பேருக்கு துணை முதல்வர் ஆகும் தகுதி உள்ளது. அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என, கட்சி மேலிடத்திடம் நானே கோரிக்கை வைப்பேன்.கூடுதல் துணை முதல்வர்களை நியமிப்பது, முதல்வரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. தேவைப்பட்டால் அமைச்சரவையில் உள்ள 33 பேரையும், துணை முதல்வராக நியமிக்க, முதல்வருக்கு அதிகாரம் உள்ளது.கூடுதல் துணை முதல்வர் பதவி மூலம், சிவகுமாரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அரசியலில் பல போராட்டங்களை சந்தித்து, தற்போது அவர் துணை முதல்வராக உள்ளார்.

இரு கண்கள் பறிப்பு

மாநில மக்களுக்கு நல்லாட்சி வழங்குங்கள் என்று, கட்சி மேலிடம் அறிவுரை கூறியுள்ளது. தேவையில்லாத விஷயங்களை பேசுவதை விட்டுவிட்டு, அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் மக்கள் என்னை புறக்கணித்துவிட்டனர்.ராம்நகர், சென்னப்பட்டணா, எனக்கு இரு கண்கள் போன்றது என, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார். இப்போது அந்த இரண்டு கண்களையும் அவரே பறித்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ