உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோசைக்கு பதில் ரூ.50,000 பார்சல் கட்டி தந்த ஹோட்டல்

தோசைக்கு பதில் ரூ.50,000 பார்சல் கட்டி தந்த ஹோட்டல்

கொப்பால்: வாடிக்கையாளருக்கு தோசைக்கு பதிலாக, ஹோட்டல் உரிமையாளர் 50,000 ரூபாயை, பார்சல் கட்டி கொடுத்தார்.கொப்பால், குஷ்டகியில் வசிக்கும் ரசூல் சாப் சவுதாகர் என்பவர், சிறிய ஹோட்டல் வைத்து, வாழ்க்கை நடத்துகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில், வங்கியில் கட்டுவதற்காக 59,625 ரூபாயை, வீட்டில் இருந்து கொண்டு வந்தார். பணம் இருந்த கவரை, உணவு பார்சல் கட்டும் இடத்தில் வைத்திருந்தார்.இதே பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் சீனிவாஸ் தேசாயி, சிற்றுண்டி வாங்க ஹோட்டலுக்கு வந்தார். இட்லி, வடை, தோசையை பார்சல் கட்டும்படி கேட்டார். அப்போது ரசூல்சாப் சவுதாகர், கவன குறைவாக தோசைக்கு பதிலாக, பணம் இருந்த கவரை பார்சல் கட்டி கொடுத்தார்.சீனிவாஸ் தேசாயி, வீட்டுக்கு சென்று பிள்ளைகளுடன் சிற்றுண்டி சாப்பிட, பார்சலை பிரித்த போது, தோசைக்கு பதிலாக பணம் இருப்பது தெரிந்தது. ஹோட்டல் உரிமையாளரின் குளறுபடி புரிந்தது. உடனடியாக ஹோட்டலுக்கு வந்து, ரசூல்சாப் சவுதாகரிடம் பணத்தை ஒப்படைத்தார்.பணத்தை எங்கு வைத்தோம் என, தெரியாமல் தேடிய இவர், பணம் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியர் சீனிவாச தேசாயின் நேர்மையை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Narayanaswami Ramachandran
ஜூலை 28, 2024 06:28

இதை விட எத்தனையோ நேர்மையான சம்பவங்கள் இங்கும் நடக்குது. இது போன்ற நேர்மையாளர்களை வாழ்த்துவதும்.


J.V. Iyer
ஜூலை 27, 2024 17:21

ஊழல் நிறைந்த தமிழ் நாட்டில் இதெல்லாம் கற்பனையிலும் எதிர்பார்க்கமுடியாது.


Nainar Ganeshan
ஜூலை 27, 2024 08:24

நல்லுள்ளம் படைத்த மாமனிதருக்கு வாழ்த்துக்கள்


venkateshan G A
ஜூலை 24, 2024 22:19

நல்லவர்கள் எங்கும் உள்ளார்கள்


Ganesun Iyer
ஜூலை 24, 2024 22:02

உழைத்த காசு திரும்ப வந்து சேரும்..


Krishnan Kutty Nair G
ஜூலை 24, 2024 21:58

நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.வாழ்க நல்லுள்ளம் கொண்ட மாமனிதர்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 24, 2024 12:48

வாழ்க வளமுடன் நலமுடன்.


Joseph MP
ஜூலை 23, 2024 18:25

உலகில் மிக சிறந்த நேர்மையாளர்


Joseph MP
ஜூலை 23, 2024 18:22

மனித நேயம் உயிரோடு இரூக்கிறது


Kassalioppilan
ஜூலை 23, 2024 11:28

அருமை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ