உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலி கருவை கலைத்த காதலன் தலைமறைவு 

காதலி கருவை கலைத்த காதலன் தலைமறைவு 

கொப்பால் : ஆபாச வீடியோவை வெளியிடுவதாக, காதலியை மிரட்டி பலாத்காரம் செய்து, மூன்று முறை கருவை கலைத்த காதலன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடுகின்றனர்.கொப்பால், கங்காவதி காரடகியை சேர்ந்தவர் ரவிராஜ், 26. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், காரடகியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும், 2020ல் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இளம்பெண்ணின் பெற்றோர், காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சம்மதித்தனர். 2021 மார்ச் 17ம் தேதி, காதலி வீட்டிற்கு ரவிராஜ் சென்றார்.திருமணம் செய்வதாக கூறி, காதலியுடன் உல்லாசமாக இருந்தார். அதை மொபைல் போனில், வீடியோவும் எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து, உல்லாசமாக இருக்க அழைத்தார். அதற்கு காதலி மறுத்துள்ளார்.கோபம் அடைந்த ரவிராஜ், 'ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' என மிரட்டி, அடிக்கடி பலாத்காரம் செய்தார். இதனால் இளம்பெண் மூன்று முறை கர்ப்பம் அடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, ரவிராஜிடம், காதலி கேட்டார். திருமணத்திற்கு மறுத்ததுடன், மாத்திரை வாங்கிக் கொடுத்து, கருவையும் கலைத்துள்ளார்.இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு, காரடகி போலீசில் இளம்பெண் புகார் செய்தார். ஆனால் ரவிராஜின் உறவினர் போலீஸ்காரர் என்பதால், புகாரை வாங்க போலீசார் மறுத்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு இளம்பெண்ணும், அவரது உறவினர்களும் காரடகி போலீஸ் நிலையம் முன், போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரவிராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி