உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவரை பிரிய மறுத்த பெண் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது 

கணவரை பிரிய மறுத்த பெண் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது 

சம்பிகேஹள்ளி,: கணவரை பிரிந்து வர மறுத்த பெண் வீட்டிற்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு கே.ஜி.ஹள்ளியில் வசிப்பவர் அர்பாஸ், 24. திருமணம் ஆகவில்லை. இவரது உறவினரான 35 வயது பெண்ணுக்கு, திருமணம் முடிந்துவிட்டது. கணவர், நான்கு குழந்தைகளுடன் சம்பிகேஹள்ளியில் வசிக்கிறார்.இந்நிலையில் அர்பாஸ், அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து உள்ளார். காதலை கூறி உள்ளார். ஆனால், காதலை ஏற்க பெண் மறுத்தார். இருந்தாலும் கணவரை பிரிந்து வந்து, தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணிற்கு, அர்பாஸ் தொல்லை கொடுத்து உள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அர்பாஸை கண்டித்து உள்ளனர்.கடந்த மாதம் 11ம் தேதி, பெண்ணின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டு உபயோக பொருட்கள் எரிந்தன. அர்பாஸ் மீது சந்தேகம் இருப்பதாக, சம்பிகேஹள்ளி போலீசில், பெண் புகார் செய்தார். தலைமறைவாக இருந்த அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கணவரை பிரிந்து வர மறுத்தால், தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ