உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இல்லாத துறைக்கு 20 மாதமாக அமைச்சராக இருந்த அவலம்

இல்லாத துறைக்கு 20 மாதமாக அமைச்சராக இருந்த அவலம்

புதுடில்லி: பஞ்சாபில், இல்லாத துறைக்கு, 20 மாதங்களாக அமைச்சர் ஒருவர் செயல்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2022 மார்ச்சில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி, பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றபோது, வேளாண் துறை, வெளிநாடுவாழ் இந்தியர் நலன் துறை என இரண்டு துறைகளின் அமைச்சராக, கட்சியின் மூத்த தலைவர் குல்தீப் சிங் தாலிவால் நியமிக்கப்பட்டார். பின்னர், 2023 மே மாதம் அமைச்சரவை மாற்றத்தின்போது, வேளாண் துறை மட்டும் பறிக்கப்பட்டு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை ஒதுக்கப்பட்டது. இதில் தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.நிர்வாக சீர்திருத்தங்கள் என்று ஒரு துறையே இல்லாமல் அதற்கு அமைச்சர் நியமிக்கப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள், சமீபத்தில் திருப்பி அனுப்பப்பட்டு பஞ்சாப் வந்தபோது தான் இந்த சம்பவம் அம்பலமானது. வெளிநாடு வாழ் இந்தியர் துறை அமைச்சரான தாலிவால் பெயர் செய்திகளில் அடிக்கடி தென்பட்டபோது, அவரது நிர்வாக சீர்திருத்தங்கள் துறையும் பேசுபொருளாகி, அப்படி ஒரு துறையே பஞ்சாபில் இல்லை என்ற உண்மை வெளிவந்தது. சர்ச்சை எழுந்த நிலையில், 'வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறையை மட்டும் குல்தீப் சிங் தாலிவால் கவனிப்பார். அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிர்வாக சீர்திருத்தங்கள் துறை, தற்போது இல்லை' என, அரசிதழில் அறிவிப்பு ஒன்றை அவசரம் அவசரமாக பஞ்சாப் அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.இதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் பகவந்த் மான், “நிர்வாக சீர்திருத்தங்கள் துறை என்பது வெறும் பெயர்தான், அதற்கு அலுவலகம் எதுவும் கிடையாது. அரசு நிர்வாகத் துறையுடன் ஒன்றாக அதை இணைத்து விட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indian
பிப் 28, 2025 17:29

செங்கல்லை திருடிவிட்டதால் தான் AIMS இதுநாள் வரை தமிழ்நாட்டில் கட்டப்படவில்லையாம் இப்போதுதான் இந்த உண்மையை நமது BJP நண்பர் சொல்லி தெரிகிறது. அதாவது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமாம். AIMS கட்டாததற்கு இதுதான் காரணமாம்.


KRISHNAN R
பிப் 25, 2025 10:04

ஜாங்கிரி வால் அவர்களின் துறை தான் அது


என்றும் இந்தியன்
பிப் 23, 2025 18:34

AAP கட்சியின் உண்மையான முகம் - அவல அசிங்க பன்னாடை கட்சி - இது பறை சாற்றுகின்றது


எவர்கிங்
பிப் 23, 2025 15:22

கோசா நரிவால் தலைமை வேறு எப்படி இருக்கும்


ஆரூர் ரங்
பிப் 23, 2025 13:36

தமிழ் வளர்ச்சித்துறை மாதிரி ஏகப்பட்ட துறைகள் உள்ளன. வாழ்க போர்டு வைக்கும் வேலையில் மட்டும் மும்முரம்


SP
பிப் 23, 2025 12:48

ஆம் ஆத்மி கட்சி தேச நலனுக்கு விரோதமானது என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. முழுமையான விசாரணை தேவை.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:48

மக்கள் வரிப்பணத்தை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் ன்னு வேதனைப்பட்டு இதுக்காக யாரையும் குறை சொல்லி கருத்துப்போட்டு பிரயோஜனம் இல்ல ..... நன்றி சொல்லவேண்டியது அம்பேத்கருக்கு ......


Kasimani Baskaran
பிப் 23, 2025 09:45

என்ன உருட்டுவது என்றே தெரியாமல் கதாபாத்திரம் இல்லாமல் சினிமா எடுத்து அதை வைத்து வாழ முயன்று இருக்கிறார்கள்.


vbs manian
பிப் 23, 2025 09:36

மாடலுக்கு போட்டியோ.


அப்பாவி
பிப் 23, 2025 08:56

இல்லாத எய்ம்சுக்கு ரெண்டு இயக்குனர்கள் வெச்சு ஓட்டலியா அதே மாதிரிதான்.


Yes your honor
பிப் 23, 2025 11:32

என்கே, எய்ம்ஸ்யை கட்டாவிட்டால் தானே. கட்டடம் கட்ட செங்கல்லை கொண்டுவந்தால் திருடிக்கொண்டு சென்று விடுகிறார்கள். அந்த செங்கல்லில் இத்தனைக்கும் எய்ம்ஸ் என்று பெயர் கூட எழுதி வைத்தாலும், அதையும் திருடிவிட்டு, நான்தான் திருடன் என்று மேடையிலேயே அந்த திருட்டு செங்கல்லைக் காண்பிக்கிறார்கள். அப்புறம் தமிழ் நாட்டில் எப்படித் தான் எய்ம்ஸ்யை கட்டுவதாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை