மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
நாசிக், :மஹாராஷ்டிராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மாலேகான் முன்னாள் மேயர் அப்துல் மாலிக், 39, படுகாயமடைந்தார்.அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். மாலேகானின் முன்னாள் மேயரான இவர், நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தன் ஆதரவாளர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், அப்துல் மாலிக்கை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.இதில், மார்பு, கை, கால்களில் குண்டு காயம் பட்டு அப்துல் மாலிக் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, மேல் சிகிச்சைக்காக நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.அப்துல் மாலிக்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அவருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இச்சம்பவத்திற்கு முன், மாலேகானில் உள்ள மற்றொரு பெட்ரோல் பங்கில் மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்க முயன்றுஉள்ளனர். அப்போது, அப்பெட்ரோல் பங்க் உரிமையாளர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், அங்குள்ள பணியாளர் ஒருவரின் மொபைல் போனையும் பறித்து சென்றுள்ளனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களே, அப்துல் மாலிக் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago