உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ்காரரை தாக்கிய கொள்ளையன் சுட்டு பிடிப்பு

போலீஸ்காரரை தாக்கிய கொள்ளையன் சுட்டு பிடிப்பு

கதக்: போலீஸ்காரர் தலையில் கல்லால் தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையன், துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.கதக், டவுன் லக்குந்தி பகுதியை சேர்ந்தவர் சஞ்சு பசப்பா, 38. இவர் மீது, 12 கொள்ளை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த வழக்குகளில், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலையில், கதக் அருகில் கனகினஹாலா கிராமத்தில் சுற்றித்திரிந்தார். கதக் டவுன் போலீஸ் எஸ்.ஐ., சங்கமேஷுக்கு தகவல் கிடைத்தது.அவரது தலைமையில் கனகினஹாலா கிராமத்திற்கு போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும்.சஞ்சு பசப்பா தப்பி ஓட முயன்றார்.போலீஸ்காரர் பிரகாஷ், சஞ்சு பசப்பாவை மடக்கி பிடித்தார்.பிரகாஷை பிடித்து தள்ளிவிட்ட சஞ்சு கீழே கிடந்த கல்லை எடுத்து, பிரகாஷ் தலையில் தாக்கினார். அதிர்ச்சியடைந்த எஸ்.ஐ., சங்கமேஷ், சஞ்சுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது.சுருண்டு விழுந்த அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை