ப்ரீத் விஹார்:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என, டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்தார்.ப்ரீத் விஹாரில் காங்கிரஸ் கமிட்டியின் கிருஷ்ணா நகர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. புத்துணர்ச்சி
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் பேசியதாவது:'பூத்' அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும். தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது.சமீபத்திய லோக்சபா தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே என்பதால், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். சாக்குப்போக்கு
தண்ணீர் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வு, தண்ணீர் திருட்டு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆட்சியில் உள்ள அரசு, தங்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாக்குப்போக்குகளை மட்டுமே கூறி வருகிறது.இவ்வாறு கூறினார்.முன்னாள் எம்.எல்.ஏ., அனில் பரத்வாஜ், மாவட்டத் தலைவர் குர்சரண் சிங் ராஜு, முன்னாள் அமைச்சர் டாக்டர் நரேந்திர நாத், முன்னாள் எம்.எல்.ஏ., குன்வர் கரண் சிங், முன்னாள் துணை மேயர் வர்யம் கவுர், ஹரி தத் சர்மா, கவுன்சிலர் சமீர், முன்னாள் கவுன்சிலர் கேப்டன் கல்வீந்தர், முன்னாள் மாவட்டத் தலைவர் முகமது உஸ்மான், அனுஜ் ஆத்ரேயா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.