உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியின் கைகளை உடைத்த சித்தப்பா

சிறுமியின் கைகளை உடைத்த சித்தப்பா

மைசூரு: தான் அழைத்தவுடன் வரவில்லை என்பதால், மூன்று வயது சிறுமியை கடுமையாக அடித்து, கையை உடைத்த சித்தப்பா கைது செய்யப்பட்டார்.மைசூரு, ஹுன்சூரின் பீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 23. இவர் ஆட்டோ ஓட்டும் பணி செய்கிறார். இவரது அண்ணன் மகள் ஜான்வி, 3. நேற்று முன் தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், ஆனந்த் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.அப்போது சிறுமி ஜான்வி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரை சித்தப்பா அழைத்து உள்ளார். விளையாட்டில் ஆர்வமாக இருந்த சிறுமி வர மறுத்தார். இதனால் கோபமடைந்த ஆனந்த், சிறுமியை பலவந்தமாக ஆட்டோவில் அழைத்துச் சென்று, உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தார். பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.அவரது இரண்டு கைகளும் முறிந்துள்ளன. ஆனந்த் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M.Mdxb
மார் 11, 2025 13:29

இரண்டு கை , கால்களையும் உடைத்து விடணும் என்ன ஒரு மோசமான சித்தப்பா


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 11, 2025 13:10

அந்த சீனி சக்கரை சித்தப்பாவின் செயலுக்கு அவனது மனநோய்தான் காரணம் ...


Nagarajan D
மார் 11, 2025 13:07

இவனை அடித்து கொன்றாலும் தவறில்லை


Ramesh Sargam
மார் 11, 2025 13:01

இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறையினரே குற்றம் செய்தவர்கள் முறையிலேயே கையை உடைத்து தண்டிக்கவேண்டும். வழக்கு பதிவு, ஜாமீன், பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு தள்ளுபடி இதெல்லாம் சரிப்பட்டுவராது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை