உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய சட்டங்களின் நோக்கம் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதே; பிரதமர் மோடி திட்டவட்டம்!

புதிய சட்டங்களின் நோக்கம் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதே; பிரதமர் மோடி திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். தேச நலனுக்காக நீதிமன்றங்கள் செயல்படுகிறது' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.டில்லியில் நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 31) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நீதிமன்றங்கள் தேச நலனுக்காக செயல்பட்டு வருகிறது. நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றம் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியர்கள் ஒருபோதும் நீதித்துறை மீதோ, நீதிமன்றங்கள் மீதோ சந்தேகம் எழுப்பியதில்லை.

முக்கிய தூண்

சுப்ரீம் கோர்ட்டின் 75 ஆண்டுகள் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் அல்ல; இந்திய அரசியலமைப்பு மற்றும் மதிப்பின் பயணம். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. நெருக்கடி நிலையின் இருண்ட காலத்திலும் உச்ச நீதிமன்றம் எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது. எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தது. நீதித்துறையில் மாவட்ட நீதித்துறை என்பது முக்கியமான தூணாக விளங்குகிறது. நமது குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்க வழிவகை செய்தது. புதிய சட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்.

ரூ.8 ஆயிரம் கோடி

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 4.5 கோடி வழக்குகளை தீர்க்க வழிவகை ஆராயப்படுகிறது. 10 ஆண்டுகளில் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ரூ.8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. புதிய கிரிமினல் சட்டங்கள் குடிமக்கள், நீதித்துறைக்கு முன்னுரிமை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளை மையமாக கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன.இவ்வாறு பிரதமர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
செப் 01, 2024 22:38

Stop Wasteful Lectures. SACK & PUNISH Judges Not Giving UnBiased Quality-Faster Judgements at Normal-Cheaper Costs And NOT PUNISHING Power-Misusing Rulers, their Biased Officials esp Investigator-Police, Judges, Vested False Complainant Gangs women, SCs, unions/ groups, Conspiring- LooterAdvocates etc, NewsHungry Media, VoteHungry Politicians.


GMM
ஆக 31, 2024 20:09

வழக்கறிஞர்கள் சட்டத்தை நீதிக்கு பதில், நிதிக்கு பயன்படுத்தி வருகின்றனர். கட்டண அடிப்படையில் வழக்கு ஏன் இல்லை. ஏழை நீதிமன்றம் வரப்போவது இல்லை. குற்றவியல் சட்ட பயனை மக்கள் அனுபவத்தில் விரைவில் உணர முடியும். நீதிமன்றம் ஜனநாயக தூண். எடை கூடும் போது தூணை வலுப்படுத்த வேண்டும். தூண் தன்னை தானே வலுப்படுத்த முடியாது. நீதிமன்றம் பற்றி, பிரதமருக்கு சரியான தகவல் போய் சேரவில்லை. சிவில் வழக்குகளில் வழங்கும் தீர்ப்புகளில் உள்ள குறைபாட்டை மக்களிடம் பெற்று, பிஜேபி அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடிக்கு பின் பல மோடி தேவை. இல்லாவிட்டால், நாட்டை பாழ்படுத்தி விடுவர்? இல்லாத மாநில அதிகாரம் மூலம் நாடு பிரச்சனை எதிர்கொண்டு வருகிறது. தேசிய மசோதா. அதற்கு எதிர் மாநில மசோதா. எங்குள்ளது அரசியல் சாசன பிரிவு? ஒரே சிவில் சட்டம் அமுல்படுத்த ஏன் முடியவில்லை? பல புதிய தேச நல சட்டங்கள் தேவை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 19:49

உங்களால் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்று எங்களுக்குத் தெரியுமே ....


அப்பாவி
ஆக 31, 2024 16:59

சட்டம்லாம் சூப்பரத்தான் போடுறீங்க. ஆனா தண்டனைதான் யாருக்கும் கிடைக்க மாட்டேங்குது. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப் பத்திரிகை தான் மிச்சம்.


கூறமுதலி
ஆக 31, 2024 16:05

ஐயா இது ஒரு simple விஷயம்ங்க. Easyயா கட்டுப்படுத்தலாம். COVID சமயத்தில எப்படி எல்லாரும் distance maintain பண்ணி கடுப்பாடோட இருந்தோம். அதே மாதிரி நம் தாய் குலங்கள் முடிந்தவரை நைட் shift வேலைக்கு போகாம இருப்பது நல்லது. அதேமாதிரி நைட் ஊர் சுத்தறத தவிர்க்கனும். உலகத்திலயே மனித ஆண் மிருகம் தான் எப்போதும் sexக்கு readyயா இருக்கும். நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கனும். அப்படியே வேளியே போனாலும் உற்ற துணையோடு பாதுகாப்பா போகணும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஆம்பள பசஙகளேயே சாயங்காலம் வீட்டிற்கு போழுதோட வரச்சொல்லி பெற்றோர்கள் condition strict a சொல்லி வெச்சாங்க


புதிய வீடியோ