உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பவர் டிவிக்கு விதித்த தடை நீக்கியது உச்ச நீதிமன்றம்

பவர் டிவிக்கு விதித்த தடை நீக்கியது உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முறையான உரிமம் இல்லாத காரணத்தால், 'பவர் டிவி' செய்திச் சேனலை ஒளிபரப்ப தடை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'பவர் ஸ்மார்ட் மீடியா லிமிடெட்' நிறுவனம் சார்பில், 'பவர் டிவி' என்ற செய்திச் சேனல் இயங்கி வருகிறது.இந்த சேனலுக்கான ஒளிபரப்பு அனுமதி, 2021 அக்டோபருடன் முடிவடைந்தது. இதை புதுப்பிக்கக் கோரி, 2022 டிசம்பரில் பவர் டிவி செய்திச் சேனல் விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பம் ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா குறித்த பாலியல் குற்றச்சாட்டு செய்திகளை, பவர் டிவி செய்திச் சேனல் தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்தது. பவர் டிவி செய்திச் சேனலால் பாதிக்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி பி.ஆர்.ரவிகாந்த கவுடா, முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ் கவுடா ஆகியோர், அந்த சேனலுக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், முறையான உரிமமின்றி சேனல் இயங்கி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ண குமார், அடுத்த விசாரணை வரை, ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பவர் டிவிக்கு தடை விதித்தார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பவர் டிவி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, நாங்கள் நம்புகிறோம். சேனலை ஒளிபரப்ப தடை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது.இவ்வாறு அமர்வு கூறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சந்திரன்,போத்தனூர்
ஜூலை 13, 2024 10:35

இந்திராகாந்தி அம்மையார் செய்ததை போல ஒரு இரண்டு வருஷத்துக்கு இந்தியாவில் எமர்ஜென்சியை அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.


GMM
ஜூலை 13, 2024 08:59

அரசு அனுமதி இல்லாமல் பவர் TV ஒளி பரப்புவது சட்ட விரோதம். அனுமதி புதுப்பித்தல் அவசியம். காரணமின்றி அனுமதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது காரணம் சரி என்றால் ஏற்க வேண்டும். கர்நாடகா உயர் நீதிமன்ற தடை சரிதானே. அனுமதி இல்லாத தவறான கருத்து சுதந்திரம் பற்றி யார் மீது பொறுப்பு நிர்ணயிக்க முடியும்?. உரிய அனுமதி பெறாமல் உச்ச நீதிமன்றம் தடையை நீக்க கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற அதிகாரத்தில் வராது. அரசு நிர்வாகம் இதில் உரிய ஈடுபாடு செலுத்த வேண்டும்.


sankaranarayanan
ஜூலை 13, 2024 01:41

மாநில ராசு கொண்டுவந்த எல்லா தடைகளையும் உச்ச நீதிமன்றம் விலக்கிக்கொள்வது என்பது இது ஒன்றும் புதிது அல்ல


Subramaniam Mathivanan
ஜூலை 13, 2024 14:40

தற்போதைய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் உயர்நீதி மன்றங்களை மதிப்பதில்லை


மேலும் செய்திகள்











புதிய வீடியோ